எண்ணம் போல் வாழ்க்கை
தமிழ் இலக்கிய பரப்பில் தன்வரலாற்று எழுகைக்கான வரலாறு நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. பாரதிதான் மரபை தமிழில் தொடங்கி வைத்தான் என்பதற்கான சான்றுகளும் உண்டு. அதிலும் ஈழச் சூழலில் தன்வரலாற்று எழுதுகைகள் போர்க் காலத்திலும் போரின் பின்னரான காலத்திலும் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது .ஒருதலைச் சார்பு இருந்தாலும் காலச்சூழலில் செயலாற்றுகைகளையும் அறிய தன்வரலாற்று நூல்கள் பெரிதும் பயன்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிடப் வெளியிடப்பட்ட நிவேதா சிவராஜாவின் "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற நூல் ஓரளவு தன் வரலாற்றை கூற முயன்று இருப்பதை காணலாம் .இந்த நூல் என்னளவில் இருவகைகளில் கணிப்பு பெறுகிறது 1. ஒரு சமூக அமைப்பு ஒன்றின் குறித்த கால செயற்பாடுகளை எழுத்துருவாக்கம் செய்திருக்கின்றது 2. சமூகப் பணிகளில் இளையவர்கள் குறிப்பாக பெண்கள் முன் வருகையின் தேவையினை உணர்த்தி நிற்கிறது எண்ணம் போல் வாழ்க்கை மனிதம் என்கின்ற அமைப்பொன்றில் நிவேதிதாவின் இணைவு அந்த அமைப்பின் செயலாற்றுகை என்பவற்றை மீட்டிப் பார்த்து கதை சொல்லுதல் பாங்கோடு எழுத்து உருவாக்கியிருக்கிறா...