கவியரங்க கவிதை
வற்றாத தமிழை வாரி வழங்கி வளமிகுந்தோர் சபையில் சற்றேனும் குறையில்லா வார்த்தையது தருமிறையே திருவருள் வேண்டுகிறேன்
அரங்கத் தலைமைக்கு
வணக்கம்
கோதுடைக்கும் குஞ்சுகளாய் குறிஞ்சியில் மேடை கண்டோன்
குஞ்சுகள் பாடும் வார்த்தை கோர்வைக்கு அரங்க தலைமை ஏற்றோன்
தயாநிதியாய்
கலாநிதியாய் தமிழைச் சேவிக்கும் அய்யன் திருவடி வணக்கம்
காத்திருந்தவன் இருத்தலைக் கவிதை ஆக்குகிறான்
தொன்ணூறின் குழந்தைகளுக்கு இருத்தல் ஏதும் புதிதோ
கானகத்து வாழ்வியலோடு கணினியின் வாழ்வதையும் மொழியால் இருத்தலாக்குகிறேன்
பொறுத்து இருத்தல் இயலாதாருக்கு பூவுலகு காதல் அறியார் எனக்காண்
இருத்தலை கவிதையில்
இழத்தலை பேசாது விடலாமோ
காடழித்து கழனியாக்கி வீடமைத்து எல்லையிலே காவல் இருந்தான் மனையாளோ வீட்டிலே காத்திருந்தாள்
'அறவை நெஞ்சத் தாயார்'
எல்லைகாக்க
எழுந்து நின்றனர் இங்கும் அப்படித்தானே எல்லைகள் திருடல் எக்காலமும் நிகழும் போலும்
பசலை பூத்தவள் பந்தலில் காத்திருக்க பாசறையில் நில மகளோடு காதல் கொண்டவன் வேலோடு நின்றான்
செம் மலையும் குருந்தூரும் கண்ணெதிரில் நின்றதால் கண்ணீரோடு நின்றான்
காத்திருத்தல் மங்கைக்கு ஆனதா
மார்போர கதகதப்பு
தலை கோதும் சிறுகை சிணுங்கல்கள்
இவைகள் ஏதும் விரும்பா இதயமுண்டோ
இருத்தலா?
நாம் ஏதும் இருக்கா தவரா
மாவா ராதே மாவா ராதே எல்லோரும் வந்ததுவே புலம்பி நிற்கும் சங்க காதலின் அவலத்திலும் இருத்தல் தானே வந்தது
புகையாவிரை பசுமைவேய்
கனியுதிர் பாலை
பெரு நாவல் பரந்துலரா தேசமெங்கும் கலந்து நின்றதுவே
ஒளிபுகா விட கானகத்தரை
விலகலில் மண்தொடும்
ஒளிக்கீற்று
காவலிலே கடமை என்றங்கு பாசறையில் நில் வீரன் மனக்கண் சிறுபிளவால் உள் நுழைந்திடுவாள் இருத்தல் தானே
புகும்
வளம் சுரண்ட வந்த சேனை
மீதேறி வில்லும் வாளும் மின்னிட சுழன்றடித்த முல்லை வீரர்காள்
எல்லை நின்ற இல்லான் காணாது போக
பாதரை துணை கொண்டு கேட்டனர் பாதகரை கேட்டனர் பகுத்தாண்டார்
இடாகினி தான் வந்து போனதோ
இருத்தலும் கேட்டலும் வாழ்வென்றானதோ பாசறை என்றிருந்தோம் ஊடலிலிருந்து புணர்ந்து பிரிந்ததால் இரங்கி நின்றோம் காத்திருந்தோம் காலமெல்லாம் கானகத்தில் கானகத்திற்காய்
கருத்துகள்
கருத்துரையிடுக