இறுதி நேசம்
நாளை
உனக்கானதா
எனக்கானதா
என் நாட்கள் எப்படியிருந்த்து
கடலருகில் இருந்தபோதும்
உப்பிருக்கவில்லை
மருதத்தில் இருந்தபோதும்
மண்சோறும் இருக்கவில்லை
தீக்குச்சிகள் ஆயிரங்களில்
விலையாக்கபட்டபோது
தீப்பிளம்புகளை பரிசளித்தாய்
சாம்பிராணிபுகைக்காய்
கந்தகத்தை பரிசளித்தாய்
இப்போது சொல்
யாருக்கானது
சாரங்கன்
2001
17052021
கருத்துகள்
கருத்துரையிடுக