நூலக எரிப்பு நாளும் வாசிப்பூட்டலும்

 யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்ச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை வடிவங்களில் ஒன்று அறிவுக் கருவூலத்தை  சேதமாக்கல்.சரஸ்வதி மஹால் ,யாழ்ப்பாணப் பொது நூலகம், இறுதி யுத்தத்தின்போது என இப்பட்டியல் நீள்கிறது . தமிழ்ச் சமூகம் இறுதி யுத்தத்தின் போதான படுகொலைகளைப் பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறது ஆனால் அத்தோடு இணைத்து பேசப்பட வேண்டியதாக அழிந்துபோன பொது ஆவணங்கள் நூல்கள் பத்திரிகைகள் பற்றிய செய்திகளும் தான் .அவை அழிந்து போன தோடும் சொல்லப்படவேண்டிய பல செய்திகளும் சொல்லாமல் ஆக்கப்பட்டு விட்டன


யாழ்ப்பாண நூலக எரிப்பு தினம் தொடர்பாக இன்றுவரை சர்ச்சைகள் காணப்படுகிறது நூலக எரிப்பு தினம் தொடர்பாக வந்த சஞ்சிகைகளிலும் நூல்களிலும்  இரு தினங்கள் குறிக்கக் இருப்பதே இதற்கான காரணமாகும். அது ஒருபுறமிருக்க நூலக எரிப்பு அதன்பின் புணரமைப்பு இன்றைய இணைய நூலகங்கள் தொடர்பில் தமிழ்ச்சமூகம் அடைந்துள்ள புரிதல் என்ன என்பது சிந்திக்க வேண்டியுள்ளது.

 யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட போது 97 ஆயிரம் நூல்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது .

ஒற்றை பிரதிகளே எஞ்சியிருந்த ஓலைச்சுவடிகள் கையெழுத்துப் பிரதிகளும் இதனுள் அடக்கம் . இதனை தவிர்த்து பல ஆண்டுகள் வரலாற்றைச் சொன்ன பத்திரிகை சேகரிப்பு களையும் இழக்க நேரிட்டது


பெரும்பாலும் நூலக எரிப்பு நாள் என்னுடைய பார்வைக்கு எட்டியவரை இன்று சமூகவலைத்தள அனுதாப விருப்புகளோடு கடந்து விடுகிறது. பேராசிரியர்  நுஃகுமானின் \"புத்தரின் படுகொலை\" என்ற  பிரசித்தமான கவிதையை  பகிர்ந்து காவித்திரிவதோடு முடிந்துவிடுகிறது .இங்கே ஆக்கபூர்வமாக விதைத்த சிந்தனை என்ன?


கணினி மயமாக்கப்படும் இச்சூழலில் நூல்களும் மின்னூல் ஆக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவதை காணலாம் noolagam.lk ,Tamil digital  library போன்ற தளங்களில் பெரும்பாலான தமிழ் நூல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய சூழல் காணப்படுகிறது.ஆவணமாக்கல் செயற்பாட்டாளர் தில்லைநாதன் கோபிநாத் அண்மையில் நடந்த இணைய வழியிலான சந்திப்பொன்றின் போது கணனி மயப்படுத்தப்பட்ட புத்தகத் சேமிப்புகள் சிலவேளைகளில் அழிந்து போய் விடலாம் ஆரம்ப காலங்களில் பயன்படுத்திய சில font தற்போது வாசிக்க  முடியாத சூழல் காணப்படுகிறது என்ற சாரப்பட கருத்தொன்றை முன்வைத்திருந்தார். 2009 முற்பட்ட காலத்தில் இயங்கிய பல இணை தளங்கள் செயலற்ற நிலையை எடுத்துக் காட்டினார்.


 பொதுவாக உலக நாடுகள் பல மின்நூல் ஆக்கப்பட்ட நூல் செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது .

இதன் காரணமாக நூலகங்களில் இருந்த பல புத்தகங்கள் அகற்றப்பட்டும்  இருக்கின்றன. சிலவேளைகளில் இந்த மின் நூல்கள் இயங்காது தவற விடப்பட்டால்  இழந்த நூல்களை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது கேள்விக்குரிய விடயமே .

தமிழ்ச்சூழலில் மின்னூலாகபட்டு பாதுகாக்கப்படுகின்ற முறையை நாம் முழுமையாக அடைந்திருக்கிறோம் என்றால் கேள்விக்குரியதே இன்றைக்கு உலகம் பூராகவும் இருக்கின்ற பலர் ஈழத்துப் படைப்பாளிகள்  படைப்புகளை நூலகம் இணையத்தளம் வாயிலாகவே பெற்றுக்கொள்கின்றனர் .

இந்த சேமிப்புகள் பூரணப்படுத்த முடியாமைக்கு பல காரணங்கள் அடிப்படையாக இருக்கிறது. அண்மையில் மறைந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா வை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த மல்லிகை இதழை கூட சேகரிப்பில் முழுமைப்படுத்த முடியாத சூழல் காணப்படுகிறது.

 காலம் முழுமையான சேகரிப்பை தவறவிட வைத்திருக்கிறது. இன்றும் தமிழ்ச் சமூகத்தில் ஏராளமான நூல்கள் தெரிந்தும் தெரியாமலும் அழிய விடும் நிலை தொடர்ந்து வருகிறது .

ஒருவரின் தனிப்பட்ட சேகரிப்பில் இருக்கின்றேன் புத்தகங்கள் அவரின் பின் ஒருவர் பயன்படுத்த இல்லாத சூழலில் அவற்றின் பெறுமதி தெரியாத போதும் பழைய புத்தகங்களுக்கு பிக்கப்படுகிறது எனக்கு இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது எங்கள் ஊரில் இருந்த ஒரு ஆங்கில ஆசிரியர் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்டார். போராட்ட இயக்கங்கள், ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர்பீடங்களோடு தொடர்புகளைப் பேணி வந்தார் .அவர் இறந்து சில மாதங்களின் பின் கேட்டபோது புத்தகங்கள் பத்திரிகை சேகரிப்புகளை பழைய பேப்பர் விலைக்கு விட்டுவிட்டதாக அவர்  வீட்டில் வசிப்பவர் குறிப்பிட்டார் ஆவணம் ஆக்கப்பட வேண்டிய பல 10 க்கும் 15 க்கும் விலையாக்கப்பட்டிருக்கிறது ஒரு இழப்பு நிகழ்ந்திருக்கிறது


நூலக எரிப்பு அதன் முன் அதன் பின் தற்போதைய சூழலில் நூலக நாடல் எந்தளவுக்கு எந்தளவு தூரம் இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். இரண்டாயிரத்திற்கு முன்னரான சமூகத்தின் ஓய்வு நேரம் வாசிப்போடு  கடந்திருக்கிறது இன்றைய சமூகத்தின் ஓய்வு, வேலை இரண்டும் இணையத்தோடு கடந்து விடுகிறது பிறகு எப்படி நூலக நாடுகள் சாத்தியமாகும் வாசிப்பு பற்றிய புரிதலை எவ்வாறு ஏற்படுத்துவது நூலக எரிப்பு தமிழ்ச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப் பெரிய வன்முறை அதுபோல நூல்களையும் நூலகங்களை நாடாத இளைய சமூகம் வளர்ந்து வருவதும் இச் சமூகத்திற்கான இழப்பே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு