கஜலும் நானும்
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் அக்கா வாசித்துப் பார் என்று தந்த கஜல் கவிதைகள் தொகுப்பு ஒன்றை வீட்டு முடக்க காலத்தில் வாசித்துமுடித்தாகிற்று.
பால்யத்தின் எல்லை விளிம்புகளில் நின்று வாசித்த போது வராத அனுபவ உணர்வுகளை இப்போதைய வாசிப்பு தந்திருக்கிறது .
இரண்டு அடிகளைக் கொண்ட கண்ணிகள் ஷேர்் எனப்படும் .இந்த ஷேர் களின் தொகுப்பு கஜல் எனலாம். தமிழுக்கு இந்த வடிவத்தை அறிமுகப்படுத்தியவர் அப்துல் ரகுமான் .
அவர் கஜல் பற்றி குறிப்பிடும்போது கஜல் அரபியில் அரும்பி பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகிய இலக்கிய வடிவம் என்கிறார் .
கயலின் இலக்கணம் கிட்டத்தட்ட குறள் வெண்செந்துறை ஒத்தது.
"ஈரடியான் அளவொத்த இயங்கிடும் எட்டு சீருள்ளதே குறள் வெண்செந்துறை"
என தொல்காப்பியம் குறள் வெண்செந்துறை இலக்கணம் கூறுகிறது .ஆனால் கஜலிறகும் வெண்செந்துறைக்கும் வேறுபாடு உண்டு .
கஜல் இரண்டு அடிகளில் சம அளவுகளில் எத்தனை சீர்களும் வரலாம் . ஆனால் குறள் வெண்செந்துறை எட்டு சீர்கள் மட்டுமே வர முடியும்.
கஜல் இலக்கிய வடிவம் காதலைப் பாடுவதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
மிகச் சொற்பமான கவிதைகளே நிலையாமையையும் தத்துவம் சார்ந்தும் பாடியிருப்பதை காணலாம்.
கஜல் கவிதைகளில் பெரும்பாலானவை ஆண் கூற்று நிலை பாடல்களாகவே அமைகிறது பிரிவாற்றாமை கைக்கிளை மரபையும் அதிகம் பாடியிருக்கின்றன.
காதலிக்க வேண்டுமென்று பழகிக் காதலித்தவர்களை விட ஏதோ ஒரு உறவு நிலையாய் பழகி காதலித்தவர்கள் அதிகம் அப்படிப் பழகும் போதும் காதலை உணர்ந்த போதும் சொல்வதற்கு ஒரு தயக்கம் இருக்கும் .
காதலை உணர்ந்த ஆடவன் ஒருவரின் கூற்றாய் நீதா ஃபாஸ்கி என்ற கவிஞன்
"இதயம் கொண்ட காதலை நான் இதுவரைக்கும் காக்கிறேன்
அவளும் அறியாம மௌன கீதம் இசைக்கும் நெஞ்சம் அல்லவோ"
என கஜலில் காட்டிவிடுகிறார்.
காதலை ,காதலிப்பதை அறிதல் மிகக்கடினம் போலும் அதே கவிஞன்
" விரியும் கூந்தல் சொல்வதென்ன வசந்தகால சந்தமும்
கமலும் இமையின் கோப்பை மதுவில் மயங்கி பூவல்லவா"
என லாவகமாய் சொல்லிவிடுகிறார்.
காதல் என்பது எல்லாச் சமூகங்களிலும் ஒரு காலம் வரையில் இரகசியமாய் கொண்டாடப்பட்டிருக்கிறது போலும். இன்றைக்கெல்லாம் காதல்
மொழிதல்கள் வாட்ஸ் அப்களில் முடிந்துவிடுகிறது .எப்போதோ ஓரிரு நாட்களில் காணக்கிடைக்கும் காதலிக்கு காதலைச் சொல்வது அவளை சம்மதிக்க வைத்து சந்திப்பதும் யுத்த களத்திற்கு வீரன் ஒருவன் செல்வதற்கு ஒப்பானது. அப்படி காதலித்தவர்கள் இடங்களையும் முதல் தழுவல்களையும் ஞாபகம் வைத்திருப்பார்கள்.
"மறைந்து பேச காவலாய் படர்ந்து நின்ற மதிற்சுவர் காலப்போக்கில் கல்வெட்டாகும் நினைவில் நின்றது"
என நடந்ததை நினைத்து இன்பம் காணுகிறார் ஹஸ்ரத் மூ காணி என்ற உருது கவிஞர்.
கஜல் கவிதைகளில் காணுகின்ற இடங்களில் எல்லாம் நம்மவர்கள் இருப்பதாய் நினைந்து இன்புறுவது புலம்புவதை காணலாம். அம்மரபில் அமைந்த பாடல்களை சங்கத்திணையிலும் காணலாம்.
நீயில்லை தானே
நிலைவாசலில் அழைப்புமணி நீயீல்லை தானே
பிரிவாற்றாமை அவலத்திலும் பஷீர்பால்ப் என்ற கவிஞன் காதலை காட்டியிருக்கிறார்.
கஜல் காதல் கூடலை,தவிப்பை பாடினாலும் பிரிவை பாடுவதில் தனித்தன்மை பெற்றிருக்கின்றது. காதலின் கையறு நிலையில் / பிரிவாற்றாமையில் நிறகும் ஆடவனின் உணர்வாய் இக்கஜல்கள் வந்து வீழ்கிறது. கதீஸ் ஷிம்பாயின் கஜல் ஒன்றில் இயற்கை நிகழ்வொன்றில் பிரிவாற்றாமை துயர் காட்டப்பட்டுள்ளது.
ஊருணி வற்றிய ஊழ்வினை எனக்கு
ஒரு துளி பெற விதியில்லையே .."
காதல் பிரிவின் பின் அவ்நினைவுகளை சுமந்து உழல்வதும் அவ்வேதனையை மதுவால் ஆற்றிக்கொள்ள முயலும் தன்மையினை கஜல்களில் கண்டிடமுடியும்.
கஜல்களின் தனித்தன்மைகளில் ஒன்று அணிக்கையாளுகை.நுண்ணிய பொருள்களோடு அவை அமைந்திருக்கும்.விட்டிலையும் மதுவையும் தீபத்தையும் லாவகமாய் உவமையாக்குகின்றனர் கஜலில்
காதல் தீ சுட்டதால் இருவரும் தீய்ந்தனர்
விட்டில் நீறானது .தீ புகையானது.
இங்கெல்லாம் தீயாகதவரும் புகையாகாதவரும் யாருமுண்டோ
பாடப்பாட பேரின்பம்
பதிலளிநீக்கு