மாசு
எழுதாத கவிதைக்கு
இடவிரும்பிய தலைப்பிது
வார்த்தைகள் ஏதும் சுழன்றடிப்பதாய் நானுரவில்லை
மார்பையும் விழிப்புருவத்தையும்
கூடலையும் ஊடலையும் நாம் பேசக்காணோம்
மையெங்கும் கவிச்சைநாற்றமடிக்க பிறகெங்கே கவிதைவரும்
நெருங்குவார கதியில்
சதுரங்கபலகையின் கடைசி சிப்பாயோடு நாமிருக்கிறோம்
பகைவனோ சீண்டி துவம்சமாக்கிறான்
தற்காப்பே வழியென்றாகிறது
தடுத்தாலும் குற்றம்
எழுந்தாலும் குற்றம்
இங்கெப்படி கவிதை வரும்
நல்லிணக்கதூதர்முகாமிட்ட தீவொன்றில்
காகித இணக்கத்தால் கலைந்துபோகிறது
நீளும் காலத்திலாவது
சிதைவுகள் கருவாகாது
சிதிலமடையா கருவொன்றிறகாய்
கவிவரட்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக