கோட்டோவிய அழகியல்

 இன்றைக்கு ஆண்கள் தினம் என்ற செய்தி புலனத்தில் ஆங்காங்கே பதியப்பட்டிருந்தது. ஆண் தோழமைகளே  நமை வாழ்த்த யாரும் இல்லை என்ற அங்கலாய்புகளோடு பதிவுகளை இட்டிருந்தார்கள். ஒரு சில பெண் தோழமைகள் சற்று வித்தியாசமாய் தங்கள் சுவற்றில் பதிவுகளை இட்டிருந்தனர் . இயற்கையின் படைப்பில் பால்ரீதியான வகைப்பாடு இயல்பானது. ஆண்,பெண் என உடலியல் ரீதியான வகைப்பாட்டோடு மனரீதியான உணர்வுநிலைகளால் மாற்றுப்பாலினத்தாரும் தனி ஓர் பாலினத்திற்குள் உள்ளடக்கப்படுகின்றனர்.பால் ரீதியான தினங்களின் அரசியல்,கொண்டாடல் பின்புலம் என்ன. சமூகத்தில் அதற்கான தேவைப்பாடு என்ன என்பதற்கான கேள்விகள் எழல் இயல்பானதே. என் அவதானிப்பில் ஆண்கள் தினம் கொண்டாட்டப்பட்டதை கேள்விப்பட்டதில்லை.ஏன் அதை பலர் அறிந்த்திருப்பது கூட கிடையாது. மகளீர்  தின கொண்டாடுதல்களும் ,இலக்குகளும் வெளிச்சொல்லப்படுமளவிற்கு இத்தினம் கரிசனை பெறுவதில்லை.அண்மைக்கால சமூகவலைத்தள பரவலாக்கம் இத்தினம் பற்றிய நினைவூட்டல்களையும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. பால் சார் தினங்களின் தேவை எவ்வாறு எழுந்திருக்கும்.உரிமை,அடையாளம்சார் உறுதிப்படுத்தல்களின் தேவையே இவற்றை அங்கிகரிக்கவைத்திருக்கும்.பாலின சமத்துவமின்மை உலகின் பெரும்பாலான நாடுகளின் சாபம். மைய விளிம்பு நிலை என அவ் அசமத்துவங்கள் தொடர்கிறது. இயற்கை படைப்பில் ஒவ்வோர் பால்சார்ந்தோருக்கும் தனித்துவ பொதுமைப்படுத்தப்பட்ட திறன்கள் காணப்படும் . இது நிற்க 

இதே புலம்பல்களும் வாழ்த்துகளும் நிறைந்த புலனச்சுவற்றில் இன்னோர் கோட்டோவியமும் கண்ணில் பட்டது. சாதாரணமாய் கடந்த எனக்கு சற்று நிதானித்து பார்க்க அக்கோட்டோவியத்தின் ஆழப்பொதிந்த கருத்தியல் வெளிப்பட்டது.நாட்குறிப்போன்றின் மேற்பக்கத்தில் காணப்படும் date ,no என்பவற்றை பயன்படுத்தி கச்சிதமாய் வரைந்திருக்கிறார் ஒவியர். காதலன் சந்திக்க ,வெளிச்செல்ல கேட்கிறான்.அதை மறுப்பதாய் கோட்டோவியம் பேசுகிறது. பார்த்தவோடு சங்க்கால இராக்குறி பாடல்கள் ஞாபகம் வந்த்து. பகற்குறியிலே சந்திந்து இன்புற்ற தலைவன் இராக்குறியில் சந்திக்க கேட்பான்.தோழி ,சுற்றோர் கருத்தியல்களால் தாக்கம் செலுத்தப்பட்ட தலைவி அதைமறுப்பாள் அவளின் விருப்பம் வெளிப்படாது சங்கச்செய்யுள் முடிந்துவிடுகிறது .

காதலை பலவாறு பலர் சொன்னாலும் எனக்கேனோ கம்பனில் தனிப்பிடிப்பு

மிதிலைகாண்படலத்திலே

"கண்ணோடு கண்ணைக்கவ்வி"

என்றோர் தொடர்வைப்பான் .காதல் காலம்செல்ல அகலவும் அணுகவும் முடியா தனித்துவ சுகம் தரும் என என்வாசிப்பில்,கேட்டலில் பொருள் கொண்டதுண்டு. காதற்சிறப்புரைத்தலில் வள்ளுவன் சொல்லும் வாழ்வியல் வயதின் உந்துதலால் ரசிக்கசெய்கிறது. அவ்வதிகாரம் புரட்டின் தனித்தோர் காதலிச சுவை கிட்டும் 

நிற்க 

தினங்களால் அடையாளப்படுத்தல்களை விட சமத்துவம்  மனங்களால் கட்டியெழுப்பபடவேண்டும்.படைப்பில் ,வாழ்தலில் என்னளவில் சகலரும் சமத்துவமுடையவர்கள்.காதலில் தான் ஏனோ சமத்துவத்தை காணமுடிகிறது.

வரைந்த ஓவியர்க்கு வாழ்த்துக்கள்


சாரங்கன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு