வெளிகளில் ஒவியம்
ஆதிரா
சூன்யவெளியாய் நீள்கிறது
நினைவு வெளி
கூடி குழைந்து காதோர கணகணப்பில்
லயித்து முத்தத்தில்
அந்தோ ப்ரியத்தில்
எல்லையில்லா கணங்களின்
அந்த நிமிடங்கள்
இன்றேங்கே
வெளிகளின் தேடலாய் நீ
மொழிகளின் தேடலில் நான்
அந்தோ மூன்றாம் பிறை
வளரட்டும் தேயட்டும்
கதிர் சுடர் ஒளியாய் சுடரெளட்டும்
நினைகுழையத்தில்
நின்வாசம்கமகமகட்டும்
அந்தோ
தெருவோர மின்குமிழில்
லயிருத்து யாசிக்கமறந்திருக்கும்
அவன்போலொருவன்
இங்கனமுளன்
நீயுணர்
களைத்து லயித்து முகிழ்த்து
மகிழ்த்தல் அந்தோ தொலைவில்லை
சாரங்கன்
கருத்துகள்
கருத்துரையிடுக