முதுமையின் ப்ரியங்கள்

 ஆதிரா

பிரிந்து விட்ட போதும் 

நீயென் பிரியமுடையாள்

பிரிவின்

பின்னரான வாழ்வில்

அப்படி உரைத்தல் ஆகாதாம்

தோளோடு தழுவிய நிழல்களை

 மிட்டல் குற்றம் என்கிறாள்

இல்லாள்

அதை மறுத்து சப்தமிட்டு உரைக்க 

நானோ வீரமற்றவனாகிறேன்

இன்றோ 

 கரம் கோர்த்த வீதியில்

உன்னைப் போலொருத்தி கண்டேன்

நினைவுகளில்

அந்த இருக்கையும்

ஆலமரத்தடியும்

அணில் ஓடிய மதிலும்

வந்தேனோ நின்றது

நின்பால்யத்தை நினைத்தொரு பெருமூச்சிலாழ்ந்து

நினைவுச் சகதிகளை நினைத்தேனை

அழித்திட முயன்று தோற்று விடுகிறேன் விசுவாசிக்கிற அன்பினுள்

தோய்தல் 

முதுமையின் வரிகளில் 

இயலாது போய்விடுகிறது

பால்யத்தை மீட்டெடுக்க நரைகளை நிறமூட்டி

சுருக்கங்களை மறைத்துக் கொள்கிறேன்


சாரங்கன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு