மீளத்திரும்பல்

 பிஞ்சொன்று

விழிபிதுங்க தெருக்கடக்கின்றது 

காலச்சுழல் மாற்றிவிட 

அதற்கு இது புதிசு

விட்டம் பார்த்து புரண்டெழும்பி

பொழுதுபோக்கியதற்கு

தெருவெளிகள் வெருட்சியாகிறது

நேயச்சூழலினுள் அது இனி வயப்படும் 

அகரம் வரைவோர் நினைவிலிருப்பர்

உருண்டு பிரண்டு 

குத்திமுறித்து 

அலாப்பி தெளிந்து ஞானமடையும் 

தெளிவடையிடையில் முடக்கங்களால்

தடக்கங்கள் விளையும்

திரைகளை காணததொன்று

சாளரமோரம் தயங்கும்


சாரங்கன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு