அருளற்ற கடவுளர்கள்
எங்கள் கடவுளர்க்கு
அருள் உண்டா?
அவலங்களை மட்டுமே
தந்தெமை வஞ்சிக்கின்றன
கனமழையும்
கடும்பசியும்
காவுகொள்கின்றன
எங்களூர் அரசியல்வாதிகளுக்கும்
கடவுளர்க்கும்
ஒப்பந்தமேதும் போலும்
கேட்பதுவும் இரப்பதுவும்
நம்வேலை
மறப்பதுவும் மறைப்பதுவும்
அவர்கள் வேலை
தேர்தல் காலவாக்குறுதிகள்
சர்ப்பத்தோலாய் கழன்று விடுகிறது
புராணங்களில் படித்ததெவையும்
நிகழக்காணோம்
'அரைசியல் பிழைத்தோர்க்கு
அறம்கூற்றாகுமாம்'
கூற்றாகிமட்டும்
நிற்கிறதிங்கே
முன்னோர் பொழுதொன்றில்
தேசத்தின் காவற்தெய்வங்கள்
அகன்றன
சூழ்கலி
அகலயாரை இரப்பது..
சாரங்கன்
கருத்துகள்
கருத்துரையிடுக