ஆல்
காலா!
நீ விதைத்தவை
கடந்தும் கடத்தப்பட்டும்
நிற்கிறதிங்கே
விதைக்கப்பட்டவை
அகழ்ந்தெடுக்கப்பட்டன
மயிற்பீலிகளும் நறுஞ்சாந்துகளும்
உமணர்கள்
கபளீரம் செய்தனர்
வீழ்ந்தபட்டதால்
நினைத்தலாகாதாம்
அந்தோ ஓர் மாலை
முடிவுற்ற போது நிர்கதியானோம்
சிதைத்தவை தீர்த்தங்காரராய்
சேதி சொல்லும் நாள்
தொலைதூரமில்லை
* உமணர்கள்- உப்பு வியாபாரிகள்
சாரங்கன்
22/11/21
கருத்துகள்
கருத்துரையிடுக