காமன் கூத்து

 கணனியில் பழைய கோப்புகளை தேடிக் கொண்டிருந்தபோது நினைவுகளோடு இந்த காணொளியும் கண்ணில் பட்டது. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி சரசவிகம கிராமத்தில் இந்த காணொளியை எடுக்கப்பட்டது. தேயிலைத் தோட்டங்கள் சூழ்ந்த மலையக கிராமம். என் மலையக பயணங்களில் இங்குதான் இரட்டை லய வீடுகளை கண்டிருக்கிறேன். பிரமதாச வீட்டுத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது இவ்வீடுகள் வழங்கப்பட்டதாய் அவ்வூர் முதியவர் சொன்ன ஞாபகம்.


ஒரு பங்குனி மாத மாலை நேரத்தில் ஹிந்தக்கல விடுதிக்கு சற்றுத் தொலைவில் உள்ள தையல் கடைக்குச் சென்றபோது எதேச்சையாக கடைக்கார அண்ணா எங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது இன்றைக்கு கூத்து இருக்கிறது வாருங்கள் என்று கேட்டார் ஓம்மென்று தலையாட்டி பயணப்படலாயிற்று. 

 யாழ்ப்பாணத்தில் ஊடகத்தில் பணியாற்றியபோது பல கூத்துக் கலைஞர்களை சந்தித்திருக்கிறேன் நேர்காணலும் செய்திருக்கிறேன் ஆனால் ஒரு கூத்தையும் எனும் நேரடியாய் பார்க்க வாய்ப்பு ஏற்படவில்லை கூத்துக்களுகளங்கள்  இன்று குறைந்து வருகிறது என்ற கவலையுடன் பலர் பேசுவதையும் கேட்டிருக்கிறேன்.


சரசவிகம கிராமத்திலே கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின் கூத்து நிகழ்த்தப் படுவதாக குறிப்பிட்டார்கள். நீண்ட காலத்திற்குப் பின் கூத்து நிகழ்த்தப் படுவதால் ஏராளமானவர்கள் ரதி காமனாக தூதனாக சிவனாக வேடமிட விரும்பினார்களாம். திருவுளச்சீட்டு முறையில் தெரிவுசெய்யப்பட்டனர்.தெரிவுசெய்யப்படுபவர்கள் மது மாமிசம் அருந்தாது நோன்பு நோற்க வேண்டுமாம். உண்மை ரதி காமனைத் தவிர வேறு சிலரும் வேடம் கட்டி ஆடியதை காணக் கூடியதாய் இருந்தது. காமன் கூத்தில் முழுநேரமும் ஆடினால் ரதியும்,காமனும்  களைப்படைந்து விடுவார்கள் என்பதற்கான ஏற்பாடு அது.காமன் பற்றிய சேதிகள் பழந்தமிழ் இலக்கியங்கள் முழுதும் காணப்படுகின்றது.சிலப்பதிகாரம், மணிமேகலை ,கம்பராமாயணம் போன்ற பேரிலக்கியங்களில் காமன் வழிபாடு,காமன்கோட்டம் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.




காமன் கூத்து மலையகத்தினுடைய தனித்துவமான கலை வடிவம் .தமிழகத்தில் இருந்து அழைத்து வரப்பட்டபோது கொண்டுவரப்பட்ட கலைவடிவங்களில் ஒன்று.நம்பிக்கை அடிப்படையில் நிகழ்த்தப்படும் போதே பூரண அனுபவத்தோடு தலைமுறை கடந்தும் கடத்தப்படுகிறது காமன் கூத்து ஆடுபவர்கள் நேர்த்தி வைத்து விரதமிருந்து காணமுடிகிறது தெய்வ சந்திதானங்களாகவே கூத்து நிகழ்களம் ஆக இருப்பதாக இருப்பதால் பாத்திரங்களாகவே மாறிவிடும் தன்மையைக் காணலாம். காமன் தகன தோடு முடிவுற்று விடும். கூத்தில் ஒவ்வோர் பிராந்தியத்திற்கு மேற்ப வேறுபாடுகளைக் காணலாம் .தூதன் வருகை காமன் கூத்தின் உடைய ஒரு உச்சம் திகில் நிறைந்ததாக 16 சூழல் தீப்பந்தங்கள் ஓடு தூதன் ஓடிவரும்போது ஒரு பக்தி நிலைப்பட்ட உணர்வு ஏற்பட்டுவிடும் உடுக்கு ஓசையோடு தூதன் வருகை நிகழும். காமன் கூத்து முக்கியம் பெரும் வாத்தியம் தப்பு தீயில் வாட்டி வாட்டி இசைக்க ஒவ்வொரு நபரும் பாத்திரமாய் மாறுவதை காணலாம் நவீன மரபுகளில் சில புகுந்தாலும் பழமை மரபுகளில் சிதையாமல் அங்கொன்று இங்கொன்றாக கூத்துக்கள் நிகழ்த்தப்படுகின்றது. காமதகனம் நிகழும்போது 

சரசவிகமவிலே "ஐயோ" "ஐயோ "எனச்சொல்லி உப்பை எறியும் மரபொன்று காணப்படுகிறது. சமநேரத்தில் ரதி மடிப்பிச்சை கேட்பதையும் காணமுடிகிறது. கிராமியம் வாழ்வியல் இறை என்று இருந்த சூழலிலும் மெல்ல மெல்ல சமஸ்கிருத மயமாக்கல் ஊடுருவ தொடங்கிவிட்டது. கோபுரங்கள் எழுந்து மணி மண்டபங்களும் எழுப்பப்படுகிறது. கும்பம் வைத்தலும் கம்பம் நாட்டலும் கால ஓட்டத்தில் இல்லாது போக அங்கும் காமன் கூத்து நிகழ்த்தப்பட்டது பார்க்கப்பட்டது என்ற சான்று ஒன்றே எஞ்சியிருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு