எண்ணம் போல் வாழ்க்கை

தமிழ் இலக்கிய பரப்பில் தன்வரலாற்று எழுகைக்கான வரலாறு நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. பாரதிதான் மரபை தமிழில் தொடங்கி வைத்தான் என்பதற்கான சான்றுகளும் உண்டு. அதிலும் ஈழச் சூழலில் தன்வரலாற்று எழுதுகைகள் போர்க் காலத்திலும் போரின் பின்னரான காலத்திலும் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது .ஒருதலைச் சார்பு இருந்தாலும் காலச்சூழலில் செயலாற்றுகைகளையும் அறிய தன்வரலாற்று நூல்கள் பெரிதும் பயன்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிடப் வெளியிடப்பட்ட நிவேதா சிவராஜாவின் "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற நூல் ஓரளவு தன் வரலாற்றை கூற முயன்று இருப்பதை காணலாம் .இந்த நூல் என்னளவில் இருவகைகளில் கணிப்பு பெறுகிறது
        1. ஒரு சமூக அமைப்பு ஒன்றின் குறித்த கால செயற்பாடுகளை எழுத்துருவாக்கம் செய்திருக்கின்றது
        2. சமூகப் பணிகளில் இளையவர்கள் குறிப்பாக பெண்கள் முன் வருகையின் தேவையினை உணர்த்தி நிற்கிறது

எண்ணம் போல் வாழ்க்கை மனிதம் என்கின்ற  அமைப்பொன்றில் நிவேதிதாவின் இணைவு அந்த அமைப்பின் செயலாற்றுகை என்பவற்றை மீட்டிப் பார்த்து கதை சொல்லுதல் பாங்கோடு எழுத்து உருவாக்கியிருக்கிறார் .பொதுவாக சமூக அமைப்புகளின் உடைய செயலாற்றுகை காலம் என்பது ஓரிரண்டு தலைமுறைகளோடு முடிந்துவிடுகிறது. அவற்றை ஆவணப்படுத்தி வைத்திருக்கின்ற போது அவை காலம் கடந்தும் பேசுவதற்கான சூழல் உருவாகிறது. மனிதத்திற்கான அந்தப் பணியை எண்ணம் போல் வாழ்க்கை தொடக்கி வைத்திருக்கிறது .இந்த நூல் எழுதுவதற்கான தேவை எழுந்ததை நிவேதிதா நமது வரலாற்றில் நாங்கள்தான் ஆவணப்படுத்த வேண்டும் என்பதற்கமைய இது உதயமாகியது என  பதிவு செய்கிறார். மனிதம் என்கிற அமைப்பின்  வரலாற்று எழுத்துகைக்கான தொடக்கமாக இந்நூலை நோக்கலாம்.
நூலிலே ஆசிரியர் பதிவு செய்திருக்கின்ற சில சம்பவங்கள் இன்னமும் தமிழ்ச் சமூகத்தின் பிற்போக்குத் தனங்கள் கவனயீனங்களை   படம் பிடித்துக் காட்டுகிறது .லாவகமான மொழியும் கதை சொல்லும் பாங்கும் வாசகர்களை ஓரளவு தன் பக்கம் இருக்கிறது மனிதத்தை செயல்தளம. இணையதளங்களைத் தாண்டி எழுத்துருவாக்க தளத்தில் பதிவுசெய்திருக்கிறார் நிவேதிதா வாழ்த்துக்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு