நறும்புகை

காலடியில் ஓய்வெடுக்கிறது 
களைத்துபோன குழல்
சிகரெட் நாற்றத்தை நறும்புகை என ஏற்றுக்கொள்
சிதைக்கபடலாம் நீ 
காணாமல் போகலாம்  
ஆனால் 
நீ தவறிழைத்து விட்டாய்
மானிடர்க்காய் வாழ்வென்றில்லாது
மதத்திற்காய் வாழ்வென்றாகிறது
தெருக்களில் விழப்போகும்
பிண்டங்களுக்காய் பிதிர் செய்ய யாருளர்
விடுதலையின் பெயரால்
சிறைவைக்கபடும் தேசத்தில் 
நீ 



சாரங்கன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு