அடகுதேசம்
கருஞ்சாந்தை அப்பி வைத்திருக்கிறது மேகம்
தெறித்து ஓய்ந்துவிடுகிறது கீற்றுக்கள்
என் நம்பிக்கைகள் போல்
இப்போது தான்
துமிக்கதொடங்கியிருக்கிறது
அடகுவைக்கப்பட்ட தேசத்தில்
துமித்தென்ன
துளிர்த்தென்ன
பச்சைகள் மஞ்சள்ளாகியும்
பைகள் நிரவக்காணோம்
இரப்பைகளை காற்றடைத்துகொள்கிறது
வீழுந்துகொண்டிருக்கிறது துமியும் நம்பிக்கையும்
வீழாதிருப்பதென்னவோ
நிலமும் சூரியனும் தான்
சாரங்கன்
கருத்துகள்
கருத்துரையிடுக