நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் அக்கா வாசித்துப் பார் என்று தந்த கஜல் கவிதைகள் தொகுப்பு ஒன்றை வீட்டு முடக்க காலத்தில் வாசித்துமுடித்தாகிற்று. பால்யத்தின் எல்லை விளிம்புகளில் நின்று வாசித்த போது வராத அனுபவ உணர்வுகளை இப்போதைய வாசிப்பு தந்திருக்கிறது . இரண்டு அடிகளைக் கொண்ட கண்ணிகள் ஷேர்் எனப்படும் .இந்த ஷேர் களின் தொகுப்பு கஜல் எனலாம். தமிழுக்கு இந்த வடிவத்தை அறிமுகப்படுத்தியவர் அப்துல் ரகுமான் . அவர் கஜல் பற்றி குறிப்பிடும்போது கஜல் அரபியில் அரும்பி பாரசீகத்தில் போதாகி உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகிய இலக்கிய வடிவம் என்கிறார் . கயலின் இலக்கணம் கிட்டத்தட்ட குறள் வெண்செந்துறை ஒத்தது. "ஈரடியான் அளவொத்த இயங்கிடும் எட்டு சீருள்ளதே குறள் வெண்செந்துறை" என தொல்காப்பியம் குறள் வெண்செந்துறை இலக்கணம் கூறுகிறது .ஆனால் கஜலிறகும் வெண்செந்துறைக்கும் வேறுபாடு உண்டு . கஜல் இரண்டு அடிகளில் சம அளவுகளில் எத்தனை சீர...
கருத்துகள்
கருத்துரையிடுக