ஏழிரண்டு
குறித்துக்கொள்
என் ஊர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
ஆயுதமேந்திய சிப்பாய்கள்
தெருச்சந்திகளில் காவலிருக்கிறார்கள்
நிவாரணப்பொதிகளோடு வரும் கனவான்களே
அதை படமாக்கி இரவலரென பெயர் வாங்குமீன்
வெறிச்சோடிய தெருக்களில்
நாய்களும் மாடுகளும்
கேட்பாரற்று அலைகிறது
அவற்றை தனிமைப்படுத்த யாருளர்
அலறிய தொலைபேசி
ஊரில் இன்னோர் இழவு வீழ்ந்த்தென்கிறது
எரிக்காது கிடக்கின்ற நான்கோடு
இப்பிணமும் சேர்ந்து கொள்கிறது
எரிப்பதற்கு பிறகு தேதிகுறிக்கப்படும்
சிலவேளை ஒரு சிரங்கை
அஸ்தி தரலாம்
ஏழ் இரண்டின் நாள்பின்
வெளி போக என்றார்கள்
போய்க்கடைகளில் விலை கேட்கையில் ஈரிண்டாய் கூட்டப்பட்டு சொல்லப்படுகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக