தம்மபதமும் நானும்
மூன்று நான்கு மாதங்களுக்கு முன் விரிவுரை ஒன்றிலே தமிழ்பௌத்தம் பற்றிய கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அந்த ஆர்வத்தில் பௌத்தம் பற்றி சிலதேடல்கள் விரிவடைந்த்தன. ஆரம்ப வகுப்புகளிலே மணிமேகலை பௌத்தகாவியம் என்றோர் குறிப்பொன்றோடு சுற்றித்திரிந்த நான் ஆர்வமிகுதியால் சிலவற்றை வாசிக்கத்தொடங்கினேன்.அதே சூழ்நிலையில் என்னைப்போலவே பௌத்ததை பற்றி பேசுகின்ற தோழமை ஒன்றும் வாய்க்கநேர்ந்த்து. அத்தோழமையோ சமகாலத்தில் ஓஷோவின் தம்மபத்தை வாசித்துக்கொண்டிருந்த்து. சிலவற்றை பகிரவும் மணிக்கணக்கில் கதைத்திடவும் தம்மபதம் பாலமாய் அமைந்த்து.இத்தேடலிலே பௌத்தமும் தமிழும்,தமிழ் இலக்கியங்களில் பௌத்தம்,இலங்கையில்சிங்களவர்கள்,
தம்மபதம்,பௌத்ததருமம் ,என்பன கண்ணில் பட்டது. இலக்கிய ரீதியான வரலாற்றுக்குறிப்புக்களோடு சில பௌத்தவரலாற்றையும் அதன் சித்தாந்தங்களையும் பேசின. ஏனோ இதில் தம்மபதம் தனித்துவமாய் எனக்கு பட்டது. என் தம்மபதவாசிப்பென்பது எப்போதெல்லாம் நான் மனச்சிகலுக்குள் தவிர்க்கிறேனோ அப்போதெல்லாம் திரையை மேலே தட்டிவிட்டு வருகின்ற ஒரிரண்டு சுலோகங்களை வாசித்து பகிர்வதோடு முடிந்துவிடுகிறது. பௌத்ததை மதமாய் பார்க்காது தத்துவமாய் பார்கின்ற ஓர் எண்ணப்பாங்கு துளிர்விட்டது.. இதே கருத்தை அண்மையில் டாக்டர் தொல்.திருமாவளவன் ஓர் நேர்காணலில் கூடச்சொல்லிக்கேட்டதுண்டு.எனக்கேனோ அண்மைக்காலமாய் அமைப்பாய் காணப்படாத மதநம்பிக்கைகள் மீது நம்பிக்கைகள் அதிகம். தம்மபதத்தை பௌத்த திருமுறைகளின் தொகுப்பு எனலாம். சோழர்காலம் வரை தமிழ்பௌத்தம் செல்வாக்கோடு திகழ்ந்த்து. 26 அத்தியாயங்களை கொண்ட புத்தரின் போதனைகளின் தொகுப்பு .
பொ.வேல்சாமி தன்னுடைய பொய்யும் வழுவும் என்றநூலில் "நிறுவனமயப்பட்ட எந்த அமைப்புமே கால ஓட்டத்தில் செல்வமும் அதிகாரமும் பெற்றுத்தன்னால் தோற்றுவிக்கப்பட்ட கொள்கைகளுக்கு எதிரியாய் மாறிவிடும் இந்நிலையே தமிழகத்தில் பௌத்ததிற்கு "ஏற்பட்டதென்கிறார். நான் வாசித்துக்கொண்டிருக்கின்ற தம்மபதம் ராமசுவாமியின் மொழிபெயர்ப்பு. ஆர்வமிருப்போர் இணையத்தில் நூலைப்பெற்றுவாசித்துவிடலாம். பௌத்தத்துவங்களை புலனங்களில் பகிருகின்ற போது நண்பர் வட்டங்களில் அதிகம் கேடகபடுகின்ற கேள்வி எதற்காய் ஏதும் காரணம்் என்பவை தான்.என்னளவில் மதங்கள்,தத்துவங்கள் மனிதகுல நன்மைக்காய் தோற்றுவிக்கப்பட்டன.ஆனால் காலகதியில் பின்வந்தோரால் தம்மிச்சைப்படி சில திணிக்கப்பட்டன. மதங்களை நம்புவன் பிற்போக்குவாதியும் அல்ல நாத்திகம் பேசுபவர்கள்முற்போக்கு வாதியுமல்ல.
கருத்துகள்
கருத்துரையிடுக