96ம் நானும்
96 திரைப்படம் வந்து மூன்றாண்டுகள் என்கிறது புலனநினைவூட்டல்கள்.எனக்கும் இப்படத்திற்குமான தொடர்பை வைத்து தனிக்கதையே எழுதலாம். அப்போது நாங்கள் முதலாம் வருடம்.கிந்தகல விடுதி எங்கள் வசந்தமாளிகை.முதலாம் பருவபரீட்சைமுடிவுற்று இரண்டாம் பருவம் தொடங்கியிருந்த்து. சற்றே இச்சூழலும் பழக்கமாகிவிட்டது. அங்கே தான் இந்தப்படம் பார்த்த ஞாபகம். எந்தப்படம் வெளியானாலும் அதில் தரமான ஒலி ஒளியமைப்போடு இருக்கிறதை எப்படியும் ஒருவாரத்தினுள் தரவிறக்கிதரும் நண்பனொருவன் அறைபாடியாய் வாய்த்திருந்தான் . எங்கள் பல்கலைக்கழகபடவிநியோகஸ்தர்களில் முக்கியமானவன் அவன். அவன் மூலமாய் தான் இப்படமும் எமக்கு வந்த்து. சனிக்கிழமை துயில் எழுதல் நண்பகலை தொட்டுவிடுதும். இது ஆண்கள் விடுதிகளின் வழமை .சாப்பாடு அதன் பின் ஒரு திரைப்படம் வெளி உலாத்தல் என ஒரு நேரசூசி இருக்கும்.இப்படித்தான் 96 ம் பார்க்க நேர்ந்து படம் பார்க்க முதலே முன் பார்த்தவர்களின் அரசல்புரசலான கதைகளும் காதுகளை எட்டியிருந்த்து.படத்தை பார்த்துக்கொண்டிருக்கின்ற போது ஒருவனுக்கு கண்ணீர் வடிகிறது. இன்னொருவனோ குளியலறையில் போய் விம்மி அழுகிறான் அந்தளவு தூரம் திரையில் வருபவற்றை அவர்கள் அனுபவித்திருக்கிறார்கள்.திரையாய் தெரியாது வாழ்வாய் தெரிகிறது அத்திரைக்காட்சிகள் இயக்குனரின் வெற்றியது. படைப்போடு சுவைஞனை கட்டிப்போட்டுவிடுகிறது.பிரிதல்,துயர்,அவலத்திற்கு இவ்ஆற்றல் அதிகம் என்னளவில்.நிற்க
பால்யக்காதலை கடக்காதவர்கள் அரிது.ஏனோ அது வாழ்வின் அங்கம் குறைந்தபட்சம் ஈர்பாவது இருந்திருக்கும்பால்யக்காதல்களை சிலர் சொல்லித்தோற்றிருப்பார்கள் ,சிலர் சொல்ல தோற்றிருப்பர் ,சிலர் வென்று தோற்றிருப்பர்,சிலர் வென்றிருப்பர் இதுவே பால்யக்காதல் விதி.பால்யக்காதல்கள் சுவைகளை விட நினைவுகளை நிறைய அள்ளித்தந்திருக்கும்.ஈர்ப்புக்களும் அவ்வாறே . இத்தகைய ஒன்றை திரைக்கதையாக்கி நனவோடையாய் கதைசொல்லியும் இயக்குநர் சாதித்திருக்கிறார் .பலரை அழவைத்தது,ஞாபகங்களை கிளறிவிட்டது மட்டுமன்றி ஒன்றுகூடல் கலாச்சாரமொன்றை உருவாக்கி விட்டதில் இப்படத்திற்கு பெரியதோர்பங்குண்டு. உயர்தரம்,சதாரணதரம்,ஊர் என்று ஒன்றுகூடல் கலாச்சாரம் சற்றுக்காலம் களைகட்டியிருந்த்து.கொரோனா முற்றுப்புள்ளியொன்றை வைத்துவிட்டது.
தமிழ்ச்சங்கம் நீதியீட்டலுக்காய் திரைப்படங்களை திரையிட்டபோது முதல் திரையிடல் இத்திரைப்படமே.பிரிதலையும் இரங்கலையும் புணர்தல் நிலத்தில் காட்சிப்படுத்தியிருந்தோம் .
காதல் பிரிவு நனவோடை அதை இயல்பாய் காட்சிப்படுத்தியதில் இயங்குனர் தனித்துவமாய் தெரிகிறார் .நடிகர்களும் இயல்பாய் திரையில்
சாரங்கன்
04102021
1957
கருத்துகள்
கருத்துரையிடுக