"அட்டை"
அன்றொருநாளில்
கூப்பன் அட்டையில்லையென
அரிசி மறுக்கப்பட்டது
பசிந்திருந்தோம்
பின்னொருநாளில்
குடும்பக்காட்டில் அண்ணன் படமில்லையென
அவனை இழுந்துச்சென்றனர்
அதன் பின் நாம்
தேடிக்கொண்டிருக்கிறோம்
இன்றைக்கு கொவிட் காட்
இல்லையென எனை
உட்செல்லவிடவில்லை
எங்கள் தேசத்தில் மனிதர்களைவிட
காட் களுக்கு மதிப்பதிகம்
301121
2141
நன்றாயிருக்கிறது
பதிலளிநீக்கு