இன்றைக்கு ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து முடித்தாயிற்று. இன்றுவரை தமிழகச் சூழலில் அடக்கு முறைக்கு உட்பட்டு வரும் இருளர் பழங்குடி மக்களின் நீதிக்கான போராட்டத்தின் ஒரு துகள் திரையில் வந்திருக்கிறது. "நீதி என்பது அரசின் வன்முறை" என எங்கோ வாசித்த ஞாபகம் தொழில், தொழிலுக்கான இடப்பெயர்வு, மக்கள் மத்தியில் பழங்குடி மக்கள் பற்றிய பார்வை என நகரத் தொடங்கும் திரைக்கதை நீதி கோரல், வழக்குகளில் கட்டிப் போட தொடங்குகிறது. ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் தத்ரூபமாய் செதுக்கி இருக்கிறார் .இருளர் தமிழக பழங்குடியினர்கள் ஒரு இனக்குழுமம். Diffloth geravad என்கின்ற அறிஞர் " இருளர் மொழி " எனும் நூலில் "இருளர் என்ற சொல் பல்வேறு சமூகக் கூறுகளை குறிக்கும் சொல்லாக ,கேரளம் ,மைசூர் ஆகிய மாநிலங்களில் பயன்படுத்தப்படுகிறது .ஆனைமலை பகுதியில் அட்டப்பாடியில் வாழும் இருளர் வட்ட இருளர் என அழைக்கப்படுகின்றனர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைநாடு அல்லது மேலைத்தேச இருளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்". என்கிறார் படம் முழுதும் இருளர் சமுதாய மக்கள் அரசு இயந்திரத்தால் ஒடுக்கப்படும் விதம் தேர்தல் ஜனநா...