நுணலின் அந்திமம்
நுணலின் அந்திமம்
காலியாக்கப்பட்ட குவளையில் மீதமிருக்கிறது
இறுதி மிடறின் எச்சில் ஈரம்
சிறைவைக்கப்பட்ட பொழுதுகள் சிதிலமாக்கப்படுகிறது
சிதைக்கப்படும் வாழ்நாளை
எண்ணி துயருறுவதா
ஓய்வை எண்ணி மகிழ்வதா என்றுழல்கிறது
தனிமையின் வெறுமையும்
சூழுறவுகளின் விலகல்களும்
ஏனோ சுழன்றடிக்கிறது
வெண்தோல் மொழிதனை
கற்றுணர முயலும் பொழுதெல்லாம்
வானத்தில் வண்ணநிலா எழுந்துவிடுகிறது
பிறகென்ன
குவளைகளின் ஈரங்களோடு
நுணல்களை அமைதியாக்குவோம்
சாரங்கன்
2207
22052021
நுணல்களை அமைதியாக்குவோம்❤
பதிலளிநீக்கு❤
நீக்கு