மூன்று மாதங்களுக்கு மேலாக எழுத்து வாசிப்பு என்பன வெகுவாய் குறைந்துபோய்விட்டது.வேலைச்சுமை ஒரு புறம் இருந்தாலும் நான் நேரமொதுக்குவதில்லை என்பதே உண்மை. தேவைகருதியவாசிப்புகளோடு மூன்றரைமாதங்கள் கடந்திருக்கும் . சமூகம் பேசதுணியாத விடயங்களில் ஒன்று காமம்.அதை இன்னமும் அபத்தமாய் கருதும் மனிதர்களை தினம் கடந்துகொண்டிருக்கிறேன்.ஏன் காதலை கூட அபத்தமாய் கருதுபவர்களை கண்டிருக்கிறேன்.ஒரு ஆண் பேசும்பெண் என்றால் வாழ்க்கை துணை என்றெல்லாம் கருதுபவர்களும் எங்கள் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதனை கடிந்துகொள்ளவோ அவரகளுக்கு புரியவைக்கவோ நானெப்போதும் முயன்றதில்லை .என் நிலைப்பாட்டில் நானென்றும் உறுதியாய் இருந்திருக்கிறேன்.காதல்,காமம்,பயணத்துணை,தோழமை என்பெல்லாம் வெவ்வேறு உறவு நிலை என்ற நிலைப்பாட்டில் நானிருக்கிறேன். இது நான் சந்தித்த மனிதர்களால் வாழந்த சூழலால் பெற்ற தெளிவு நிறக கழிவறை இருக்கை தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்ட நூல்.லதா எழுதியிருக்கின்ற முப்பத்திரண்டு கட்டுரைகளை கொண்ட நூல். தமிழ்சூழலில் பேசாப்பொருளாய் இருக்கும் காமத்தை மேலெழுந்த வாரியாய் பேசுகிறது.காமத்தை காதலை சிலபுள்ளிகளால் தொடும் ...