கழிவறை இருக்கை

 

மூன்று மாதங்களுக்கு மேலாக எழுத்து வாசிப்பு என்பன வெகுவாய் குறைந்துபோய்விட்டது.வேலைச்சுமை ஒரு புறம் இருந்தாலும் நான் நேரமொதுக்குவதில்லை என்பதே உண்மை. தேவைகருதியவாசிப்புகளோடு மூன்றரைமாதங்கள் கடந்திருக்கும் .
சமூகம் பேசதுணியாத விடயங்களில் ஒன்று காமம்.அதை இன்னமும் அபத்தமாய் கருதும் மனிதர்களை தினம் கடந்துகொண்டிருக்கிறேன்.ஏன் காதலை கூட அபத்தமாய் கருதுபவர்களை கண்டிருக்கிறேன்.ஒரு ஆண் பேசும்பெண் என்றால் வாழ்க்கை துணை என்றெல்லாம் கருதுபவர்களும் எங்கள் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதனை கடிந்துகொள்ளவோ அவரகளுக்கு புரியவைக்கவோ நானெப்போதும் முயன்றதில்லை .என் நிலைப்பாட்டில் நானென்றும் உறுதியாய் இருந்திருக்கிறேன்.காதல்,காமம்,பயணத்துணை,தோழமை என்பெல்லாம் வெவ்வேறு உறவு நிலை என்ற நிலைப்பாட்டில் நானிருக்கிறேன். இது நான் சந்தித்த மனிதர்களால் வாழந்த சூழலால் பெற்ற தெளிவு
நிறக
கழிவறை இருக்கை தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்ட நூல்.லதா எழுதியிருக்கின்ற முப்பத்திரண்டு கட்டுரைகளை கொண்ட நூல். தமிழ்சூழலில் பேசாப்பொருளாய் இருக்கும் காமத்தை மேலெழுந்த வாரியாய் பேசுகிறது.காமத்தை காதலை சிலபுள்ளிகளால் தொடும் லதாவின் அத்தனை புள்ளிகளையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து ஏற்கவும் முடியாது மறுதலிக்கவும் இயலாது.வாழ்வின் அடிப்படைத்தேவையால் காமத்தை அடையாளப்படுத்தலில் தொடங்கும் காம்ம் பற்றி கட்டுடைப்புகள் இதை அபத்தமாய் கருதும் சமூக்கட்டுமானங்களை நோக்கிவீசப்படும் கல்லெறிகளே.தமிழ்சூழலில் பெண்கள் மீது கட்டமைத்து பாதுகாத்துவரதுடிக்கும் கற்புமீதான கட்டுமானங்களை கேள்விக்குள்ளாக்கும் பாங்கு லாவகமானது.சமூக வன்முறைகள் பலவற்றுக்கு பாலியல் வரட்சியும் பாலியல் கல்வியும் புகட்டபடாமையே என கட்டுரைகளில் வெளிப்பட்டுநிற்கிறது.காதல்,காம்ம்,சமூக்கட்டுமானங்கள்,நம்பிக்கை,சுய இன்பம்,பாலியள்கல்வி,காம்ம் பற்றிய கட்டுமானங்கள்,என பலதலைப்புகளில் கட்டுரைகள் விரிகின்றது. மையமாய் காதலும் பாலியலும் அமைகிறது. காதலையும் காமத்தையும் அபத்தமாய் கருதும் சமூகத்தில் கழிவறை இருக்கை வாசிக்கப்படவேண்டிய புத்தகம்.
முரண்கள் நிறையவே இருக்கிறது அதைவிட அங்கிகரிப்புக்கள் அதிகம்

கழிவறை இருக்கையில் லதா மேற்கோள் காட்டிய Alain de bottom என்பவரின்
" நாம் காமத்தை பற்றி மிக அதிகமாக சிந்திப்பதில்லை அதைப்பற்றி மிகத்தவறாகவே சிந்திக்கிறோம்" என்பது ஏனோ நினைவுகளில் ஒட்டி விட்டது

சாரங்கன்
040922
2249

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு