அப்பக்கதைகள்
இப்போதெல்லாம் வாழ்க்கை பெரும்பாலும் பயணங்களினூடே கழிந்துவிடுகிறது.யாழ்ப்பாணத்தில் இருந்து சிவன் கோயிலடியை தாண்டுவதறகிடையில் சத்தி எடுத்து திரிந்த நான் பயணங்களை நித்தியமாக்கிகொண்டேன். வாரத்திறகு குறைந்த்து 1000கிலோமீற்றர் இப்போதைய கணக்கு.பயணங்களில் சந்திக்கின்ற மனிதர்களும் புசிக்கின்ற உணவுகளும் நினைவடுக்குகளில் என்றைக்கும் நிலைத்திருக்கும் . முருகண்டி கச்சானில் தொடங்கி மருதங்கடவ சோளம் கண்டி பொல்றொட்டி எனபெல்லாம் தினபண்டபட்டியில் இருக்கும்.
...................
ஹெலபோஜன் என்றோர் கடை தென்பகுதிகளில் வெகுபிரபல்யம் இந்தமாதிரியை வைத்துத்தான் வடமாகாணசபை அம்மாச்சியை உருவாக்கியதாகவும் பெயரை வைபதறகு கூட இழுபறிபட்டதாகவும் செவிவழியாய் கேட்டஞாபகம். இங்க அம்மாச்சி கதை தேவையற்றது எண்டு நினைக்கிறேன் .செவ்வாய் வெள்ளி பெரும்பாலும் ஹெலபோஜனின் தட்டல்களில் பொழுது புலர்ந்து அலர்ந்துவிடும்.இணுவிலின அயலூர் என்பதால் செவ்வாய் வெள்ளி நித்தியசைவம். அணமையிலே அங்கே ஓர் உணவுத்திருவிழா.விதம் விதமாய் சிங்கபணபாட்டு உணவுகளை சமைத்து விற்றுகொண்டிருந்தார்கள்.புட்டு என்று ஒன்றையும் அவர்கள் செய்யமுயறத்துகொண்டிருக்கிறார்கள்.புட்டில் PhD முடித்த யாழ்ப்பாணகார்ரகள் முன் நேசரிகள் நிறகமுடியாத்து இயலபு தானே
.................
தயிர் அப்பம்
வழமையாக அப்பம் தயாரிப்பு எனபது வலுத்த பொறிமுறை .முதல்நாள் ஊறவைத்து கஞ்சி காய்ச்சி என்று பதப்படுத்தல் நீளும் .பதநீருக்காய் குவளையும் நான். வடமராட்சி அப்பத்துக்கு வெகுபிரபல்யம். தட்டிகடை அப்பம் சாப்பிடாம வாழுறது வீண் எண்டிலாம்.ஆனா..
..... தென்பகுதிவந்தபிறகு அப்பம் நாக்கோடு ஒட்டிகொண்டுவிட்டது.எங்களூர் கரம்சுண்டல் வண்டிபோல மூலைக்கு மூலை அப்பகடை இருக்கும் .பெணகளின் பகுதிநேரத்தொழில் அது.அந்த அப்பமும் சம்பலும் சுவையின் உச்சம் பாலப்பங்களை கண்டது சுவைத்து இல்லை தென்பகுதியிலே
.......
அன்றைக்கு கிரி அப்ப என்று விளம்பரபடுத்தபட்டிருந்த்து. காசை கொடுத்து வாங்கினால் சற்றும் எதிர்பார்க்கவியலாத ஒன்று . அப்பம் அதன் மேல் தயிர் சீனிப்பாணி .எங்களூரில் தயிர் சோற்றுக்குமட்டுமே.மட்டக்களப்பில் புட்டோடு ஒரு தடவை சாப்பிட்டிருக்கிறேன்.சற்று வித்தியாசமான சுவை .சுண்டகாய்ச்சிய சீனிபாகுனின் சுவையில் அனைத்து புளித்து உட்போகிறது அப்பம்
ஆனால் தட்டிகடை பாலப்பமும் தோசையும் இன்னோர் உலகத்து உணவுகள் தான்
கருத்துகள்
கருத்துரையிடுக