லவ்ருடே
Love today
"காதல் என்பது
புரிதல்களில் கட்டியெழுப்படும் பேரன்புலகு
இரண்டு நாட்களுக்கு முன் lovestoday தோழர்களோடு பார்த்தாயிற்று. நண்பர்கள் பலரின் பின்னூட்டல்களும் விமர்சனங்களும் இத்திரைப்படம் மீதொரு ஆர்வம் ஏற்பட காரணமாய் அமைந்தது.
இத்திரைப்படம் என்னைப்பொறுத்தவரை தொண்ணூறுகளின் பின்பிறந்த இளையவர்களின் வாழ்வியலை மைப்படுத்தி எடுக்கபட்டபடம் .வழமையாய் தென்னிந்திய திரைப்படங்களில் சப்பைகட்டிநிறகும் கதாநாயகத்தன்மையோ மலினப்படுத்தப்பட்ட கவர்ச்சியோ இரட்டை அரத்தவசனங்களோ இல்லாமை படத்தின் தனித்தனமையை காட்டிநிற்கிறது. காதல் என்பதை பலர் முற்றுமுழுதான சரணாகதியென்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.என் தொடர்பிற்குள் உள்ள சிலர் கூட தங்களோடு மட்டுமே கதைக்கவேண்டும்,அனுமதிபெற்றுத்தான் வெளிச்செல்வது என்பதெல்லாம் தான் காதலின் பிடிமானங்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். காதலிக்கின்ற இருவர்களுக்கும் தனிவேறு உலகம் இருக்கிறது என்பது என் தெளிவு . lovestodayயின் கதைக்கருவும் அதுவே. முன் தலைமுறையிடம் காதற்பிரிவென்பது பெரும் அவலமாய் கருதப்பட்டிருக்கிறது.அது மெல்லமெல்ல கட்டுடைக்கப்பட்டு வருகிறது என்பதெல்லாம் மகிழ்சியான செய்திகள் தான். காதலிக்கின்ற இருவர்க்கும் இருக்கின்ற இருவேறு உலகங்களும் சமுகத்தின் பயணத்தில் நடக்கும் சிலசில மாறுதல்களும் தத்துருபமாய் காட்டப்பட்டிருக்கிறது.பெண் கன்னித்தன்மை பற்றி சமூகம் கொண்டிருக்கும் கருத்தியல்களும் திரையில் லாவகமாய் வந்திருக்கிறது. ஆணின் சலனப்பட்டமனமும் தனக்கானவளின் தனிப்பட்ட உலகை அங்கிகரிக்கமறுக்கின்ற மனோநிலையும் உரையாடலுக்குரியவை.பெண் ஒருவரை நிராகரிக்கப்படுகின்ற போது நிர்வாணப்படுத்தலும் அவளை அசிக்கபடுத்தலுக்கு பாலியல் காணொளிகளோடு இணைக்கின்ற வக்ரமனநிலையும் யதார்த்தமாய் வந்து நிற்கிறது.காதலன்,நண்பன்,பிரிந்துவிட்டகாதலன் இந்த உறவு நிலை இவற்றை பெண் கையாள்கிறாள் எனபதுவும் தன் இயலபை மறைத்துகொள்ள போராடும் சோகமும் திரைகாட்சிகளாய் விரிகின்றது. இசையும் படத்தொகுப்பும் கதையை நகர்த்திசெல்கிறது.சத்தியராஜ் கதைய்யின் நாயகனாய் எனக்கு தோன்றுகிறார். இடையிடையே வரும் பிராமணியதமிழும் சுவாரசியத்தைகூட்டுகிறது.கலப்புதிருமணங்களை தமிழக பார்ப்பனர்கள் அங்கிகரிக்ககூடிய சூழல் உருவாகும் என்ற நம்பிக்கையும் மறைமுகமாய் காட்டப்பட்டிருப்பதாய் எனக்குபடுகிறது.
சிலசுதப்பல்கள் அங்க்காங்கே நிகழ்ந்துதான் விடுகிறது.இறுதியில் அந்தநாய்குட்டிஎல்லாம் எப்படி கடற்கரைக்கு வருகின்றது என்பதெல்லாம் இயல்புக்கு மிஞ்சிய கற்பனைகள் தான்.புனிதம் என்பது கட்டமைக்கபட்ட ஒன்று இயல்பு எனபது தான் நிதர்சனமனது எனபதை பேசிநிற்கிறது.குடும்பமாய் பார்பதற்கு ஏற்றபடமா என்றால் என்னளவில் பதில் இல்லை .காதலிப்பவர்களும் காதலிக்கபோகிறவர்களும் பார்க்ககூடிய படம்.காதலை கட்டளைகளுக்கான லேபலாய் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் .
கருத்துகள்
கருத்துரையிடுக