சூரியனைத்தின்றவர்கள்

 



தமயந்தியை எனக்கு சத்தியன் தான் அறிமுகம் செய்துவைத்தார்.கடல்அட்டைவளர்ப்பு பற்றிய நிகழ்ச்சியொன்றை செய்வதற்காய் சிலவற்றை தேட வேண்டியிருந்த்து.அப்படி தேடிக்கொண்டிருந்த்த போது சத்தியன் அன்பளிப்பு செய்த புத்தகம் தான் சூரியனைத்தின்றவர்கள்.என் வாசிப்புக்கள் இப்பொழுதெல்லாம் மேலெழுந்தவாரியான தேவைகருதியவாசிப்புக்கள் தான்.ஏனோ தமயந்தியை நேரமொதுக்கி வாசிக்கதொடங்கினேன்.தமயந்தியை கவிஞன் என நான் மதிப்பிடுவதை விட கடற்காற்றின் உப்புசுவையளவை சுவாசித்தே சொல்லும் நல்ல கடலவதானி என்பேன்.கவிதைகள் முழுதிலும் கடலே வியாபித்து நிற்கிறது. 

கரிசல் இலக்கியங்களை வாசிக்கும் போது சில சொல்லாடல்கள் அந்தியமாய் தென்படும். அது வட்டாரவழக்கு.தமயந்தியின் கவிதைகளிலும் தாராளமாய் கடற்கரை வட்டார வழக்கு ஆதிக்கம் செலுத்துகிறது.சடக்கஞ்குச்சி என்பதெல்லாம் புதியசொற்களென நினைக்கிறேன்.கடல் உழவனின் வாழ்வியல் அவலம் பலகவிதைகளின் கருக்களாய் அமைகின்றதுwelcome drink,இறுதியாய் பேசவிடுங்கள்,முண்டச்சுறா சுடலைக்குருவி என்பன  கடலை வாசகனுக்கு காட்டும் கவிதைகளாய் அமைகிறது. ஈழத்து கவிதைமரபு போரை அதன் வலியை மட்டுமே பாடுகிறது எனபதற்கு மறுதலிப்பு இக்கவிதை தொகுதி போலும்.கவிதைகளின் நிகழ்களம் தீவகம் எனபதை பனங்கூடல்களும் கண்ணாமரங்களும் காட்டிவிடுகின்றன.

மீட்பர்களும் மேய்ப்பர்களும் என்னளவில் அரசியல் கவிதை .அப்பம் ஆணிகள் என்பவையெல்லாம் சமகால இலங்கை அரசியலில் தவிர்க்கமுடியா குறியீடுகள். "வெள்ளையடிக்கபட்ட மீடபர்களையும்

கொள்ளையடிக்கப்பயிற்றப்பட்டமேய்ப்பர்களையும்....."

 தேர்தல் அரசியல்வாதிகளை தோலுரித்துகாட்டுகிறார் தமயந்தி.

கடலை நேசிப்பதற்கும் கடலை அறிவதற்கும் தமயந்தியின் சூரியனை தின்றவர்கள் ஒரு ஆரம்ப்புள்ளி.



கடலிடம் சொல்லு அவள்மடி சாய்ந்து 

உறங்கிட வருவேன் என்று 


இது தமயந்தியின் உளக்குமுறலும் பேராவலும் போல


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு