தீர்ப்புக்கள்
கோ வென்றனர்
மீட்பர் என்றனர்
உரத்துகோசமிட்டு
வாழிய எம்மான்
என்றனர்
அரணாய் நின்றங்கு
ஆம்பல் சூடி மகிழ்ந்தனர்
இன்றோ
காத்துநின்றவேலிகளை
தகர்த்தெறித்தனர்
காவல்வீரர்கள்
கைகட்டிநின்றனர்
அறம் தழைக்க
ஊழ்வினைகள்
செய்வினைகளானது
குடிதழீகோலோச்சா
மன்னன்
முடிமேல் குடி அடி விழக்கண்டோம்
சிதைத்த நடுகற்கள்
எழுதியதீர்ப்புகள்
கருத்துகள்
கருத்துரையிடுக