இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறிக்கப்படா நினைவு

படம்
​ தள்ளி வைக்கபட்ட அணைப்புகளில் சந்திப்பின் வரவுக்குறி யுகந்திரமாய் நீள்கிறது தீர்மானிகப்படாதது  இது எப்படி  எங்கிருந்து  எதனால் சித்தார்தன்  சங்கத்தை விட்டு  நொடிகளை உணர்கிறான் அந்திமங்களை விட்டு  அலாதிகளை அணைகிறான்  காவிகளை களைகிறான் அந்தோ  விசும்பின் வெண்மேகங்கள் இணைந்தன தள்ளிவைப்பட்டவை  மேகந்திரள் சூழ்கிறது 21.23

பேரன்ப

  தோழர்களின்  சிரிப்புகளால் நிறைந்துகிடக்கிறது  உன் அறை  எப்போதோ  சந்தேகம் கொண்டார்கள்  ஏனென்று நாமறியோம் இங்கொன்றும் காதலில்லையென  எப்படி சொல்லாம் நீ சொல்... அவளொருத்தி  உன் முகம் சிவந்த்தாய் புலம்பித்தீர்க்கிறாள்  காதலற்ற உறவொன்றின்  இழையங்களை  எப்படி சொல்லுவோம் வா கண்டடைவோம்

லவ்ருடே

படம்
 Love today "காதல் என்பது  புரிதல்களில் கட்டியெழுப்படும் பேரன்புலகு  இரண்டு நாட்களுக்கு முன் lovestoday தோழர்களோடு பார்த்தாயிற்று. நண்பர்கள் பலரின் பின்னூட்டல்களும் விமர்சனங்களும் இத்திரைப்படம் மீதொரு ஆர்வம் ஏற்பட காரணமாய் அமைந்தது.  இத்திரைப்படம் என்னைப்பொறுத்தவரை தொண்ணூறுகளின் பின்பிறந்த இளையவர்களின் வாழ்வியலை மைப்படுத்தி எடுக்கபட்டபடம் .வழமையாய் தென்னிந்திய திரைப்படங்களில் சப்பைகட்டிநிறகும் கதாநாயகத்தன்மையோ மலினப்படுத்தப்பட்ட கவர்ச்சியோ இரட்டை அரத்தவசனங்களோ இல்லாமை படத்தின் தனித்தனமையை காட்டிநிற்கிறது. காதல் என்பதை பலர் முற்றுமுழுதான சரணாகதியென்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.என் தொடர்பிற்குள் உள்ள சிலர் கூட தங்களோடு மட்டுமே கதைக்கவேண்டும்,அனுமதிபெற்றுத்தான் வெளிச்செல்வது என்பதெல்லாம் தான் காதலின் பிடிமானங்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். காதலிக்கின்ற இருவர்களுக்கும் தனிவேறு உலகம் இருக்கிறது என்பது என் தெளிவு . lovestodayயின் கதைக்கருவும் அதுவே. முன் தலைமுறையிடம் காதற்பிரிவென்பது பெரும் அவலமாய் கருதப்பட்டிருக்கிறது.அது மெல்லமெல்ல கட்டுடைக்கப்பட்டு வருகிறது என்ப...

சூரியனைத்தின்றவர்கள்

படம்
  தமயந்தியை எனக்கு சத்தியன் தான் அறிமுகம் செய்துவைத்தார்.கடல்அட்டைவளர்ப்பு பற்றிய நிகழ்ச்சியொன்றை செய்வதற்காய் சிலவற்றை தேட வேண்டியிருந்த்து.அப்படி தேடிக்கொண்டிருந்த்த போது சத்தியன் அன்பளிப்பு செய்த புத்தக ம் தான் சூரியனைத்தின்றவர்கள்.என் வாசிப்புக்கள் இப்பொழுதெல்லாம் மேலெழுந்தவாரியான தேவைகருதியவாசிப்புக்கள் தான்.ஏனோ தமயந்தியை நேரமொதுக்கி வாசிக்கதொடங்கினேன்.தமயந்தியை கவிஞன் என நான் மதிப்பிடுவதை விட கடற்காற்றின் உப்புசுவையளவை சுவாசித்தே சொல்லும் நல்ல கடலவதானி என்பேன்.கவிதைகள் முழுதிலும் கடலே வியாபித்து நிற்கிறது.  கரிசல் இலக்கியங்களை வாசிக்கும் போது சில சொல்லாடல்கள் அந்தியமாய் தென்படும். அது வட்டாரவழக்கு.தமயந்தியின் கவிதைகளிலும் தாராளமாய் கடற்கரை வட்டார வழக்கு ஆதிக்கம் செலுத்துகிறது.சடக்கஞ்குச்சி என்பதெல்லாம் புதியசொற்களென நினைக்கிறேன்.கடல் உழவனின் வாழ்வியல் அவலம் பலகவிதைகளின் கருக்களாய் அமைகின்றதுwelcome drink,இறுதியாய் பேசவிடுங்கள்,முண்டச்சுறா சுடலைக்குருவி என்பன  கடலை வாசகனுக்கு காட்டும் கவிதைகளாய் அமைகிறது. ஈழத்து கவிதைமரபு போரை அதன் வலியை மட்டுமே பாடுகிறது எனபதற்கு மற...

கழிவறை இருக்கை

படம்
  மூன்று மாதங்களுக்கு மேலாக எழுத்து வாசிப்பு என்பன வெகுவாய் குறைந்துபோய்விட்டது.வேலைச்சுமை ஒரு புறம் இருந்தாலும் நான் நேரமொதுக்குவதில்லை என்பதே உண்மை. தேவைகருதியவாசிப்புகளோடு மூன்றரைமாதங்கள் கடந்திருக்கும் . சமூகம் பேசதுணியாத விடயங்களில் ஒன்று காமம்.அதை இன்னமும் அபத்தமாய் கருதும் மனிதர்களை தினம் கடந்துகொண்டிருக்கிறேன்.ஏன் காதலை கூட அபத்தமாய் கருதுபவர்களை கண்டிருக்கிறேன்.ஒரு ஆண் பேசும்பெண் என்றால் வாழ்க்கை துணை என்றெல்லாம் கருதுபவர்களும் எங்கள் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அதனை கடிந்துகொள்ளவோ அவரகளுக்கு புரியவைக்கவோ நானெப்போதும் முயன்றதில்லை .என் நிலைப்பாட்டில் நானென்றும் உறுதியாய் இருந்திருக்கிறேன்.காதல்,காமம்,பயணத்துணை,தோழமை என்பெல்லாம் வெவ்வேறு உறவு நிலை என்ற நிலைப்பாட்டில் நானிருக்கிறேன். இது நான் சந்தித்த மனிதர்களால் வாழந்த சூழலால் பெற்ற தெளிவு நிறக கழிவறை இருக்கை தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்ட நூல்.லதா எழுதியிருக்கின்ற முப்பத்திரண்டு கட்டுரைகளை கொண்ட நூல். தமிழ்சூழலில் பேசாப்பொருளாய் இருக்கும் காமத்தை மேலெழுந்த வாரியாய் பேசுகிறது.காமத்தை காதலை சிலபுள்ளிகளால் தொடும் ...

தீர்ப்புக்கள்

 கோ வென்றனர் மீட்பர் என்றனர் உரத்துகோசமிட்டு  வாழிய எம்மான் என்றனர் அரணாய் நின்றங்கு ஆம்பல் சூடி மகிழ்ந்தனர் இன்றோ காத்துநின்றவேலிகளை தகர்த்தெறித்தனர் காவல்வீரர்கள் கைகட்டிநின்றனர் அறம் தழைக்க ஊழ்வினைகள்  செய்வினைகளானது குடிதழீகோலோச்சா மன்னன்  முடிமேல் குடி அடி விழக்கண்டோம் சிதைத்த நடுகற்கள் எழுதியதீர்ப்புகள்

கனவு

படம்
 என் கனவில் நேற்று ஏரோது வந்தார் வட்டிவீதங்கள்  கடன்பற்றியெல்லாம் வகுப்பெடுத்தார் மரியாளின் பக்தர்கள்  இங்கிருப்பதால்  அப்பிள் தடையென்றார் மார்க்கத்தினுள்ளும்  முரண் என்றார் நாடுகடக்க முயல்போரை சிறைப்பிடிக்க உத்தரவிட்டதாய் கதை சொன்னார் மீள வழியேதும்  உண்டோ எனக்கேட்ட ஞாபகம் சிரித்த ஏரோது அடிமைகளை விற்கும் சந்தைகளை தேடுவதாய் சொன்னார்  செம்படைகள் ஏதும் என முணுமுணுக்க ரஷ்யகட்டுரைகளில் அவர்கள்  சமத்தர்கள் என்றார் கனவு கலைந்த்து  கனவே தான் சாரங்கன் 11.3.22

ப்ரியங்களின் அந்திமம்

படம்
 மிதமிஞ்சிய ப்ரியங்களின் பிரிவுகளில் இன்னமும்  மீதமிருக்கின்றது இறுதி அணைப்புக்களின்  இளஞ்சூடு வெம்மையின் தகிப்பும் விலகலும் பொழிவின் கூதலும்  அணைப்பும் வாழ்வின் நியாயத்தீ ஓ நீ இன்னமும்  ரட்சித்திக்கொண்டிருக்கிறாயா? பரலோகபிதாவே இறங்கி வாரும் பாவங்களை மன்னித்தருளும் யாரங்கே? புதிய பழைய ஏற்பாடுகளை கலந்துவாசிப்பது சாரங்கன் 130222

சுதந்திரம்

 கரிநாள் என்றார்கள் பஞ்சாங்கமோ சதுர்த்தசியென்றது சுதந்திரம் என்றார்கள்  மிட்டாய்களை விட சன்னங்கள் அதிகம் பகிரபடுகிறது அரூபசங்கிலிகள் நெருக்குகின்றன கூத்தாடிகள் அறிக்கைகளில் சுதந்திரம் நினைவூட்டப்படுகிறது என்நாட்குறிப்பின் விடுமுறை நாளொன்று கடக்கின்றது எந்நாளும் பச்சைகளும் காவிகளும் தீர்ப்பெழுத  பகடைகளாகிறோம் கிடைக்கப்பேறாத தீர்வுகளோடு பழம்கோரிகைகளும் புத்துயிர்பெறுகின்றன நான்  எங்கே எப்போது எதில் எதனால் சுதந்திரமானவன் சாரங்கன்

விதி

படம்
 ரசித்தல் பிரபஞ்சவிதி மண் விண் பெண் அத்தனையும் கண்களால் கைதாக்கல் தொடர்கிறது சீருடையில்லா காவலன் இங்கே உலா வருகிறான் வெளிகளில்  அறைகளில் குலாவுதலில் முனகலில் தொடர்கிறது யாரங்கே! என்முன்னிருக்கும் ரசித்தல் பொருளை ம(ற)றைக்க முயல்வது

என்னினிய சித்தார்த்தா

  உனை மேசையில் படுக்கையில் எங்கும்  நிலைப்படுத்தியிருக்கிறேன் தம்மபதத்தையும்  பீடகத்தையும் புரட்டிய நான் சரணடைந்துவிட்டேன் பின்தெளிந்தேன் மார்க்கங்கள் மலிவு விலை  வாக்குகளென்று நீயேது செய்வாய் தேசம் துறந்த நீ  தேசம் ஆள்வோரின் சிநேகிதம்  ஆனதெப்படி நீ பரிநிர்வாணம் அடைய  சமிஞ்சைகள் ஏதும்  தம்பபன்னியில் இல்லை புறகெதற்கு நீ யிங்கு  எதற்கு