கனவு

 என் கனவில் நேற்று

ஏரோது வந்தார்

வட்டிவீதங்கள் 

கடன்பற்றியெல்லாம்

வகுப்பெடுத்தார்

மரியாளின் பக்தர்கள் 

இங்கிருப்பதால் 

அப்பிள் தடையென்றார்

மார்க்கத்தினுள்ளும் 

முரண் என்றார்

நாடுகடக்க முயல்போரை

சிறைப்பிடிக்க உத்தரவிட்டதாய்

கதை சொன்னார்

மீள வழியேதும் 

உண்டோ எனக்கேட்ட ஞாபகம்

சிரித்த ஏரோது

அடிமைகளை விற்கும் சந்தைகளை

தேடுவதாய் சொன்னார் 

செம்படைகள் ஏதும் என முணுமுணுக்க

ரஷ்யகட்டுரைகளில் அவர்கள் 

சமத்தர்கள் என்றார்

கனவு கலைந்த்து 

கனவே தான்


சாரங்கன்

11.3.22

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு