சுதந்திரம்

 கரிநாள் என்றார்கள்

பஞ்சாங்கமோ சதுர்த்தசியென்றது

சுதந்திரம் என்றார்கள் 

மிட்டாய்களை விட சன்னங்கள்

அதிகம் பகிரபடுகிறது

அரூபசங்கிலிகள் நெருக்குகின்றன

கூத்தாடிகள் அறிக்கைகளில்

சுதந்திரம் நினைவூட்டப்படுகிறது

என்நாட்குறிப்பின்

விடுமுறை நாளொன்று கடக்கின்றது

எந்நாளும்

பச்சைகளும் காவிகளும்

தீர்ப்பெழுத 

பகடைகளாகிறோம்

கிடைக்கப்பேறாத தீர்வுகளோடு

பழம்கோரிகைகளும் புத்துயிர்பெறுகின்றன

நான் 

எங்கே

எப்போது

எதில்

எதனால்

சுதந்திரமானவன்


சாரங்கன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு