நூலக எரிப்பு நாளும் வாசிப்பூட்டலும்
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. தமிழ்ச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை வடிவங்களில் ஒன்று அறிவுக் கருவூலத்தை சேதமாக்கல்.சரஸ்வதி மஹால் ,யாழ்ப்பாணப் பொது நூலகம், இறுதி யுத்தத்தின்போது என இப்பட்டியல் நீள்கிறது . தமிழ்ச் சமூகம் இறுதி யுத்தத்தின் போதான படுகொலைகளைப் பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறது ஆனால் அத்தோடு இணைத்து பேசப்பட வேண்டியதாக அழிந்துபோன பொது ஆவணங்கள் நூல்கள் பத்திரிகைகள் பற்றிய செய்திகளும் தான் .அவை அழிந்து போன தோடும் சொல்லப்படவேண்டிய பல செய்திகளும் சொல்லாமல் ஆக்கப்பட்டு விட்டன யாழ்ப்பாண நூலக எரிப்பு தினம் தொடர்பாக இன்றுவரை சர்ச்சைகள் காணப்படுகிறது நூலக எரிப்பு தினம் தொடர்பாக வந்த சஞ்சிகைகளிலும் நூல்களிலும் இரு தினங்கள் குறிக்கக் இருப்பதே இதற்கான காரணமாகும். அது ஒருபுறமிருக்க நூலக எரிப்பு அதன்பின் புணரமைப்பு இன்றைய இணைய நூலகங்கள் தொடர்பில் தமிழ்ச்சமூகம் அடைந்துள்ள புரிதல் என்ன என்பது சிந்திக்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட போது 97 ஆயிரம் நூல்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது . ஒற்றை பிரதிகளே ...