இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முன்னிரா

  கற்றல்   மண்டபங்கள்   நிறைந்தன குலாவிய   காதலர்கள் சற்று   நிறுத்தினர் மூசுபனிவீச   திணை   கண்டு   வந்தான்   தோழன் நட்சத்திரங்களை   கணக்கிட்டு   மயக்கங்கள்   கண்டு   தெளிந்தேன் மண்டபங்கள்   வெளிக்கட்டும் காதலோ   கொடிது   நின்   துயர்   நான்றிவேன்   கரந்தையில்   துஞ்சிய   அவன்   போல்   உன்   காதல் நடுகல்லாகாதிருக்கட்டும் சஞ்சலம்விட்டுவா   வீண்மீன்களை   ரசிப்போம்

அவர்வயின் விதும்பல்

ஆதிரா நீள்   தலால்   நிகழ்ந்தென்னை நினைத்து   வருத்தியுழைகிறாய் கமழ்தார்   மார்பனைய   சூடொன்று   கண்டிலோம்   முயங்கி   சலித்திடா   மயிரொதுக்கிய   முன்னெற்றி முத்தசுவை கண்டிலோம்   நின்னால்   நின்   பிரிவால் பொழில்   குறிஞ்சி   நீள்பாலையால்   தகிக்கிறெனக்கு அகவெளியிடை   தகிப்பால் தளர்வுற்றுபோகிலேன்   சாரங்கன்   1919

குறியிடப்பட்ட சிலை

​நீள் இரவொன்றில்  தனித்திருந்து முகாரி இசைக்கிறேன் மின்னும் வீண்மீனோ தீர்க்கபட்ட சன்னங்களின் நொடியை வீசித்தீர்கிறது சாமரைகள் தாமரைகளுக்காகிறது நுணலும் ஆ ககளும் கறுப்புகளின் போட்டிகளில் சுபமிடபடுகிறது  வரையபட்ட பட்டையொன்றின் மோதலில் கலசங்களின் வைப்புகள் மறைக்கபட்டன அந்தோ  நொடியின் நொடியில் நிலமொன்றின்  கபளீகரம் இங்கொன்றாய்  நீள்கிறது சாரங்கன் 2026

அப்பக்கதைகள்

படம்
இப்போதெல்லாம் வாழ்க்கை பெரும்பாலும் பயணங்களினூடே கழிந்துவிடுகிறது.யாழ்ப்பாணத்தில் இருந்து சிவன் கோயிலடியை தாண்டுவதறகிடையில் சத்தி எடுத்து திரிந்த  நான் பயணங்களை நித்தியமாக்கிகொண்டேன். வாரத்திறகு குறைந்த்து 1000 கிலோமீற்றர் இப்போதைய கணக்கு.பயணங்களில் சந்திக்கின்ற மனிதர்களும் புசிக்கின்ற உணவுகளும் நினைவடுக்குகளில் என்றைக்கும் நிலைத்திருக்கும் . முருகண்டி கச்சானில் தொடங்கி மருதங்கடவ சோளம் கண்டி பொல்றொட்டி எனபெல்லாம் தினபண்டபட்டியில் இருக்கும். ................... ஹெலபோஜன் என்றோர் கடை தென்பகுதிகளில் வெகுபிரபல்யம் இந்தமாதிரியை வைத்துத்தான் வடமாகாணசபை அம்மாச்சியை உருவாக்கியதாகவும் பெயரை வைபதறகு கூட இழுபறிபட்டதாகவும் செவிவழியாய் கேட்டஞாபகம். இங்க அம்மாச்சி கதை தேவையற்றது எண்டு நினைக்கிறேன் .செவ்வாய் வெள்ளி பெரும்பாலும் ஹெலபோஜனின் தட்டல்களில் பொழுது புலர்ந்து அலர்ந்துவிடும்.இணுவிலின அயலூர் என்பதால் செவ்வாய் வெள்ளி நித்தியசைவம். அணமையிலே அங்கே ஓர் உணவுத்திருவிழா.விதம் விதமாய் சிங்கபணபாட்டு உணவுகளை சமைத்து விற்றுகொண்டிருந்தார்கள்.புட்டு என்று ஒன்றையும் அவர்கள் செய்யமுயறத்துகொண்டிருக்கிறார...