இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊழி

படம்
 கடத்தபட்டத்தாய் சான்றுகள் கிடந்தபோதும் மீட்கப்பட வாய்பேதும்  இல்லை சபரியும்  விபீடணனும் தானே  காணமல் ஆக்கப்பட்டனர் தாவிய தலையாட்டி பாசிசம் என கூவுகிறது  சாரங்கன்

அடகுதேசம்

படம்
 கருஞ்சாந்தை அப்பி வைத்திருக்கிறது மேகம் தெறித்து ஓய்ந்துவிடுகிறது கீற்றுக்கள் என் நம்பிக்கைகள் போல் இப்போது தான்  துமிக்கதொடங்கியிருக்கிறது அடகுவைக்கப்பட்ட தேசத்தில்  துமித்தென்ன  துளிர்த்தென்ன  பச்சைகள் மஞ்சள்ளாகியும் பைகள் நிரவக்காணோம்  இரப்பைகளை காற்றடைத்துகொள்கிறது வீழுந்துகொண்டிருக்கிறது துமியும் நம்பிக்கையும் வீழாதிருப்பதென்னவோ  நிலமும் சூரியனும் தான் சாரங்கன்

நறும்புகை

படம்
காலடியில் ஓய்வெடுக்கிறது  களைத்துபோன குழல் சிகரெட் நாற்றத்தை நறும்புகை என ஏற்றுக்கொள் சிதைக்கபடலாம் நீ  காணாமல் போகலாம்   ஆனால்  நீ தவறிழைத்து விட்டாய் மானிடர்க்காய் வாழ்வென்றில்லாது மதத்திற்காய் வாழ்வென்றாகிறது தெருக்களில் விழப்போகும் பிண்டங்களுக்காய் பிதிர் செய்ய யாருளர் விடுதலையின் பெயரால் சிறைவைக்கபடும் தேசத்தில்  நீ  சாரங்கன்