வேள்பாரியும் நாவல் மரமும்
#வேள்பாரியும் நாவல்மரமும்
சஙக இலக்கியப்பாடல்களில் புதைந்துகிடக்கும் பாரியின் சிறப்புகளை தேடி எடுத்து தன் கற்பனையும் புகுத்தி விரியும் பெரும் நாவலாய் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன். என்னளவில் நாவல் இலக்கியம் காதல் போல் அதன் சுவை நெடிய பாதை வழியே தெவிட்டா ஈர்ப்போடு அழைத்து செல்ல வேண்டும் . ஒவ்வோர் பக்கங்களை புரட்டும் போதும் இதழ் கவ்விய முத்தங்களைப்போல் அதன் சுவை இனிப்பா,துவர்ப்பா,கசப்பா எனத்தூண்டிட வேண்டும். வேள்பாரியின் ஒவ்வோர் பக்கங்களை புரட்டும் போது சில தகவல்கள் ஆச்சரியமூட்டவைத்தன.அவை புனைவாகவே இருக்கட்டும். வேள்பாரி முழுதும் நாவல் மரம் பற்றிய செய்திகள் விரவிக்கிடக்கின்றது.நாவலாசிரியர் குறைந்தது 7,8 வகை நாவற் பழங்கள் பற்றி குறிப்பிடுகிறார்.ஒவ்வோர் நாவலும் தனித்தனி சுவை என சொல்கிறார் பூ நாவல் கொடி நாவல் சிறகு நாவல் நரி நாவல் வெண் நாவல் நீர்நாவல் சிறு நாவல் இவை ஏனோ நாவல் பற்றிய என் தேடலை தொடக்கிவிட்டது.வேறுபட்ட சுவை கொண்ட சுவை கொண்ட நாவல்களை சுவைத்திருக்கிறேன். ஆயினும் அவற்றை இவ்வாறு பெயரிட்டு அழைப்பதை நான் கேட்டதில்லை.வெண் நாவலை தனித்து அடையாளப்படுத்துவதை கண்டிருக்கிறேன். சரி பண்டைத்தமிழ் இலக்கியங்களில் நாவல் பற்றிய செய்திகளை தேடத்தொடங்கிய போது என் தேடலுக்குள் இவை தென்பட்டன.நாவல்பழம் உவமையாகவும்,உணவுப்பொருளாகவும் பயன்படுத்தப்பட்ட செய்திகள் கிடைக்கின்றது. நற்றிணையில் " பொங்கு திரை பொருத வார்மணல் அடைகரைப் புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி கிளை செத்து மொய்த்ததும்பி.. பெரும்பாணாற்றுப்படையில் "நாவலந்தண்பொழில் வீவின்றுவிளங்க நில்லாவுலகத்து நிலைமை தூக்கி பந்நிலை யணுகல் வேண்டி நின்னரை பாசியன்ன சிதர்வை நீக்கி பாவியன்ன வலிர்நூற்கலிங்க.." மலைபடுகடாவில் " காபினுதிர்தன கருங்கனிநாவன் மாறுகொள் வொழுகின்வூறு நீருயவை நூறொரு குழீஇயின் கூவை சேறுரீந்த துண்ணுநர்த் தடுத்தன தேமாப்புண்ணரின் தாலையுக்கன் நெடுந்தளின்..." இவை தவிர குட நாட்டினர் நாவற்பழங்களை ஆய்ந்து உண்ணும் பாடலொன்று புறநானூற்றில் காணப்படுகின்றது. " கருங்கனி நாவல் இருந்து கொய்துண்ணும் பெரும் பெயராதி பிணங்களிற் குடநாட்டெயினர்......" மணிமேகலையிலும் உலகவறலிபுக்ககாதையில் காயசண்டிகை நாவற்பழத்தினை முதிப்பதாக ஒரு செய்தி வருகிறது. நிற்க நாவல் வெப்பவலயப்பயிரினம்.இவை பயிரிட்டு வளர்க்கப்படுவது குறைவு.யாழ்ப்பாணத்தில் நாகர்கோயில்,நாவற்காடு பகுதிகளில் நாவல் மரங்கள் அதிகம் காணப்படுகின்றது.நாவல் மரங்கள் மர அமைப்பில் வேறுபடுவது போன்று சுவையிலும் வேறுபடுகின்றது. . நாவல் மரம் மிர்த்தாசியோ குடும்பத்தை சார்ந்த்து .இரு சொற்பெயரீட்டில் சிரிஜீயம் கியுமினி என அழைக்கப்படுகிறது..

கருத்துகள்
கருத்துரையிடுக