லவ்ருடே
Love today "காதல் என்பது புரிதல்களில் கட்டியெழுப்படும் பேரன்புலகு இரண்டு நாட்களுக்கு முன் lovestoday தோழர்களோடு பார்த்தாயிற்று. நண்பர்கள் பலரின் பின்னூட்டல்களும் விமர்சனங்களும் இத்திரைப்படம் மீதொரு ஆர்வம் ஏற்பட காரணமாய் அமைந்தது. இத்திரைப்படம் என்னைப்பொறுத்தவரை தொண்ணூறுகளின் பின்பிறந்த இளையவர்களின் வாழ்வியலை மைப்படுத்தி எடுக்கபட்டபடம் .வழமையாய் தென்னிந்திய திரைப்படங்களில் சப்பைகட்டிநிறகும் கதாநாயகத்தன்மையோ மலினப்படுத்தப்பட்ட கவர்ச்சியோ இரட்டை அரத்தவசனங்களோ இல்லாமை படத்தின் தனித்தனமையை காட்டிநிற்கிறது. காதல் என்பதை பலர் முற்றுமுழுதான சரணாகதியென்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.என் தொடர்பிற்குள் உள்ள சிலர் கூட தங்களோடு மட்டுமே கதைக்கவேண்டும்,அனுமதிபெற்றுத்தான் வெளிச்செல்வது என்பதெல்லாம் தான் காதலின் பிடிமானங்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். காதலிக்கின்ற இருவர்களுக்கும் தனிவேறு உலகம் இருக்கிறது என்பது என் தெளிவு . lovestodayயின் கதைக்கருவும் அதுவே. முன் தலைமுறையிடம் காதற்பிரிவென்பது பெரும் அவலமாய் கருதப்பட்டிருக்கிறது.அது மெல்லமெல்ல கட்டுடைக்கப்பட்டு வருகிறது என்ப...