இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்ணம் போல் வாழ்க்கை

படம்
தமிழ் இலக்கிய பரப்பில் தன்வரலாற்று எழுகைக்கான வரலாறு நூற்றாண்டைக் கடந்து நிற்கிறது. பாரதிதான் மரபை தமிழில் தொடங்கி வைத்தான் என்பதற்கான சான்றுகளும் உண்டு. அதிலும் ஈழச் சூழலில் தன்வரலாற்று எழுதுகைகள் போர்க் காலத்திலும் போரின் பின்னரான காலத்திலும் அதிகம் ஆதிக்கம் செலுத்தியது .ஒருதலைச் சார்பு இருந்தாலும் காலச்சூழலில் செயலாற்றுகைகளையும் அறிய தன்வரலாற்று நூல்கள் பெரிதும் பயன்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் வெளியிடப் வெளியிடப்பட்ட நிவேதா சிவராஜாவின் "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற நூல் ஓரளவு தன் வரலாற்றை கூற முயன்று இருப்பதை காணலாம் .இந்த நூல் என்னளவில் இருவகைகளில் கணிப்பு பெறுகிறது         1. ஒரு சமூக அமைப்பு ஒன்றின் குறித்த கால செயற்பாடுகளை எழுத்துருவாக்கம் செய்திருக்கின்றது         2. சமூகப் பணிகளில் இளையவர்கள் குறிப்பாக பெண்கள் முன் வருகையின் தேவையினை உணர்த்தி நிற்கிறது எண்ணம் போல் வாழ்க்கை மனிதம் என்கின்ற  அமைப்பொன்றில் நிவேதிதாவின் இணைவு அந்த அமைப்பின் செயலாற்றுகை என்பவற்றை மீட்டிப் பார்த்து கதை சொல்லுதல் பாங்கோடு எழுத்து உருவாக்கியிருக்கிறா...

விண்ணதிர்பரணி

படம்
 " என்னையும் இணைத்துக் கொண்ட ஒட்டுமொத்த சமூகத்தின் வலி தீர்ப்பாக எனது கவிதைகளை நான் எழுதுகிறேன் இங்கே என்னுடைய குரலை சமூகத்தின் குரலாகவும் கொள்ளப்படுகிறது"  புதுவை இரத்தினதுரை டிலோயினி மோசஸின் கவிதைத் தொகுப்பாக விண்ணதிர் பரணி அண்மையில் வெளிவந்திருக்கின்றது .கவிஞர் தன் சூழல், வாழ்வியல் என்பவற்றை பெரும்பாலும் தன்நிலை கூற்று நிலையில் கவிதைளாகப் படைத்திருக்கிறார்.ஈழத்தின் உடைய இலக்கியச்செல்நெறி  ஒரு காலத்தின் பின் போர் அவலங்களை பாடுவதில் மையம் கொள்கிறது .டிலோயினியின் பெரும்பாலான கவிதைகளும் அதே தளத்தில்தான் எழுதப்பட்டிருக்கின்றது .போரின் பின்னரான சமூகம் இன்னொரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் கைதிகளின் விடுதலை, நில அபகரிப்பு ,நல்லிணக்க முயற்சிகள் தோல்வியுறல் போன்ற சமூகச் சிக்கல்களும் கவிதை கருவாக விரிந்திருக்கிறது .ஆத்மாவின் ஆதங்கம் என்ற கவிதையில்              "சுடலையில் தான்வேக             சிறைவைக்க அவர் போக            செல்வங்கள் இரண்டும்        ...