நானும் சேகுவாராவும்
கா.பொ.சாதாரணதரம் முடித்துவிட்டு விவாதம் எனகின்ற கனவுகளோடு சதா யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சுத்திக்கொண்டிருந்தேன். அப்போது பாடசாலை நூலகம் இடம்மாறிக்கொண்டிருந்த்து. தற்போதைய சபாலிங்கம் மண்டபத்திற்கு கிழிருந்த அறையில் இருந்து பிரார்தனை மண்டபத்திற்கு முன்கட்டப்பட்ட மேல்மாடியில் நூலகம் ஒழுங்குபடுத்தும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சில புத்தகங்கள் கழிக்கப்பட்டு குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்கள்.அங்கே கண்டெடுத்த புத்தகம் ஒன்றின் மூலம் தான் சே நெருக்கமானார். என் எண்ணப்பாங்கு எல்லா நாட்டு கிளர்ச்சியாளர்களும் வென்றால் புரட்சிவாதிகள் தோற்றால் ,வெல்லும் வரை தீவிரவாதிகள் .மொழியால் இனத்தால் வேறுபட்ட ஒருவனை உலகம் முழுதும் கொண்டாடுகிறார்கள் என்றால் அவனிடம் ஏதோ தத்துவ,கருத்தியல் செயல்தள ஈர்ப்பிருக்கிறது தானே. என்வாசிப்பனுவத்தில் சே ஓர் தத்துவியலாளராய் இல்லாது ஓர் செயற்பாட்டாளராகவே விளங்கினார். தத்துவ்வாதிகளை விட புரட்சியாளர்களின் பணிச்சுமை கூடியது. பொலிவிய கியூபக்காடுகள் என்று ஓர் தீயை விதைத்துச்சென்ற ஆளுமைதான் சே. சாகசப்பயணங்களோடு ஏனோ சேக்கு ஈர்ப்பு போலும்.ஈழத்தில் மருத்துவ...