இடுகைகள்

செப்டம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோட்டான் தூது

படம்
 புரண்டு எழ மரணசேதிகள் முந்தாநாள் முச்சந்திக்கிழவன்  நேற்றோ  பரியாரி  நாளை ? கோட்டான்கள் கத்தியபோதெல்லாம்  சிரட்டை தட்டி துரத்திய அம்மாவை பரிகசித்த நான் ஒருசோடிகளை  தலைமாட்டில்    தூங்கியெழ சாக்காடு  விடியல்கள்  சாரங்கன்

ஏழிரண்டு

படம்
குறித்துக்கொள் என் ஊர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது ஆயுதமேந்திய சிப்பாய்கள்  தெருச்சந்திகளில் காவலிருக்கிறார்கள் நிவாரணப்பொதிகளோடு வரும் கனவான்களே  அதை படமாக்கி இரவலரென பெயர் வாங்குமீன் வெறிச்சோடிய தெருக்களில்  நாய்களும் மாடுகளும்  கேட்பாரற்று அலைகிறது அவற்றை தனிமைப்படுத்த யாருளர் அலறிய தொலைபேசி  ஊரில் இன்னோர் இழவு வீழ்ந்த்தென்கிறது எரிக்காது கிடக்கின்ற நான்கோடு  இப்பிணமும் சேர்ந்து கொள்கிறது எரிப்பதற்கு பிறகு தேதிகுறிக்கப்படும் சிலவேளை ஒரு சிரங்கை  அஸ்தி  தரலாம் ஏழ் இரண்டின் நாள்பின் வெளி போக என்றார்கள் போய்க்கடைகளில் விலை கேட்கையில் ஈரிண்டாய் கூட்டப்பட்டு சொல்லப்படுகிறது