இராவணனுக்கான போர்
இலங்கைத்தீவிலே சிங்களவருக்கும் தமிழர்க்கும் அரசியல் பொருளாதாரம் நிலம் உரிமை என்று தொடர்ந்து வந்த முரண்கள் தற்போது தொன்மம் சார்ந்த விடயங்களிலும் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. நில உரிமையை இல்லாது ஒழிப்பதற்கு இலங்கைத்தீவில் பெரும்பான்மையாக வாழும் இனம் இதை கையில் எடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக இராவணன் பற்றிய உரிமை கொண்டாடுதல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது . இரண்டு ஆண்டுகளுக்கு முன் நகரங்களை வர்ணமயமாக் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ராவணன் படம் முதன்மை நகர்கள் அத்தனையிலும் வரையப்பட்டிருந்தன கண்டி சிகிரியா மாத்தறை தம்புள்ளை போன்ற கலாச்சார நகர்களில் ராவணனின் ஓவியங்கள் பெரும்பான்மைச் சுவர்களை அலங்கரித்து இருக்கின்றன . அதைவிட இருமொழிகளிலும் இராவணன் தொடர்பான தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன . இராவண வம்சம் என்று அடையாளப்படுத்தும் பலரை சமூக ஊடக வெளிகளில் காணமுடிகிறது. தமிழ் மரபில் இராவணன் பற்றிய குறிப்புகளை பலர் கம்பராமாயணம் மூலமே அறிந்து கொண்டிருக்கின்றனர் . அக் காவியத்தின் படி எதிர்நிலை காவியத்தலைவன் இலங்காபுரி ஆண்டவன் அரக்கர் குலத்தவன், சீதையை அபகரித...