முன்னிரா
கற்றல் மண்டபங்கள் நிறைந்தன குலாவிய காதலர்கள் சற்று நிறுத்தினர் மூசுபனிவீச திணை கண்டு வந்தான் தோழன் நட்சத்திரங்களை கணக்கிட்டு மயக்கங்கள் கண்டு தெளிந்தேன் மண்டபங்கள் வெளிக்கட்டும் காதலோ கொடிது நின் துயர் நான்றிவேன் கரந்தையில் துஞ்சிய அவன் போல் உன் காதல் நடுகல்லாகாதிருக்கட்டும் சஞ்சலம்விட்டுவா வீண்மீன்களை ரசிப்போம்