இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பக்கதைகள்

படம்
இப்போதெல்லாம் வாழ்க்கை பெரும்பாலும் பயணங்களினூடே கழிந்துவிடுகிறது.யாழ்ப்பாணத்தில் இருந்து சிவன் கோயிலடியை தாண்டுவதறகிடையில் சத்தி எடுத்து திரிந்த  நான் பயணங்களை நித்தியமாக்கிகொண்டேன். வாரத்திறகு குறைந்த்து 1000 கிலோமீற்றர் இப்போதைய கணக்கு.பயணங்களில் சந்திக்கின்ற மனிதர்களும் புசிக்கின்ற உணவுகளும் நினைவடுக்குகளில் என்றைக்கும் நிலைத்திருக்கும் . முருகண்டி கச்சானில் தொடங்கி மருதங்கடவ சோளம் கண்டி பொல்றொட்டி எனபெல்லாம் தினபண்டபட்டியில் இருக்கும். ................... ஹெலபோஜன் என்றோர் கடை தென்பகுதிகளில் வெகுபிரபல்யம் இந்தமாதிரியை வைத்துத்தான் வடமாகாணசபை அம்மாச்சியை உருவாக்கியதாகவும் பெயரை வைபதறகு கூட இழுபறிபட்டதாகவும் செவிவழியாய் கேட்டஞாபகம். இங்க அம்மாச்சி கதை தேவையற்றது எண்டு நினைக்கிறேன் .செவ்வாய் வெள்ளி பெரும்பாலும் ஹெலபோஜனின் தட்டல்களில் பொழுது புலர்ந்து அலர்ந்துவிடும்.இணுவிலின அயலூர் என்பதால் செவ்வாய் வெள்ளி நித்தியசைவம். அணமையிலே அங்கே ஓர் உணவுத்திருவிழா.விதம் விதமாய் சிங்கபணபாட்டு உணவுகளை சமைத்து விற்றுகொண்டிருந்தார்கள்.புட்டு என்று ஒன்றையும் அவர்கள் செய்யமுயறத்துகொண்டிருக்கிறார...