ப்ரியங்களின் அந்திமம்
மிதமிஞ்சிய ப்ரியங்களின் பிரிவுகளில் இன்னமும் மீதமிருக்கின்றது இறுதி அணைப்புக்களின் இளஞ்சூடு வெம்மையின் தகிப்பும் விலகலும் பொழிவின் கூதலும் அணைப்பும் வாழ்வின் நியாயத்தீ ஓ நீ இன்னமும் ரட்சித்திக்கொண்டிருக்கிறாயா? பரலோகபிதாவே இறங்கி வாரும் பாவங்களை மன்னித்தருளும் யாரங்கே? புதிய பழைய ஏற்பாடுகளை கலந்துவாசிப்பது சாரங்கன் 130222