இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெட்டுக்கிளிகளும் விவசாய அழிவுகளும்

உலக ஊடகங்களின் பெரும்பரப்பை ஆக்கிரமித்த கொரோனா வைரசின் வீரியம் சற்று குறைந்து வருவது ஆறுதலளிக்கிறது. ஆனாலும் இந்தியாவை நோக்கி பெரும் வெட்டுக்கிளி கூட்டம்  படையெடுக்கிறது என்ற   செய்தி பலரை நடுநடுங்க வைக்கிறது. ஏலவே வீட்டு முடக்கம் காரணமாக ஏராளமான நாடுகள் பொருளாதார வீழ்ச்சி நிலையை கண்டுள்ளது. தொடர்ந்து பஞ்சங்கள் ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளதுள்ளனர். இந்த வெட்டுக்கிளிகளினால் ஏற்படப்போகும் அழிவு ஏராளமான தாக்கங்களை ஏற்படுத்தப்போகின்றது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பினால் உற்பத்திகள் அழிக்கப்பட போகின்றது. அண்மைக் காலங்களில் சோமாலியா, எதியோப்பியாவில் தான் வெட்டுக்கிளிகளால் பாரிய அளவு விவசாய நிலங்கள் சேதமாக்கமப்பட்டுள்ளது. பருவப்பெயர்ச்சி போல காலத்திற்கு காலம் இடம்பெயரும் இவற்றைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் உற்பத்தியாளர்கள் தடுமாறி வருகின்றனர். தமிழில் தோன்றிய கரிசல் காட்டு நாவல்களிலும் இந்த வெட்டுக்கிளிகளின் உடைய படையெடுப்பு அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் விரிவாகப் பேசப்பட்டுள்ள தன்மையை காணலாம். கோபல்ல கிராமத்து மக்கள் நாவலை உதாரணமாக குறிப்பிடலாம். தமிழில் வெள...