இடுகைகள்

மே, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேள்பாரியும் நாவல் மரமும்

#வேள்பாரியும் நாவல்மரமும்  சஙக இலக்கியப்பாடல்களில் புதைந்துகிடக்கும் பாரியின் சிறப்புகளை தேடி எடுத்து தன் கற்பனையும் புகுத்தி விரியும் பெரும் நாவலாய் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன். என்னளவில் நாவல் இலக்கியம் காதல் போல் அதன் சுவை நெடிய பாதை வழியே தெவிட்டா ஈர்ப்போடு அழைத்து செல்ல வேண்டும் . ஒவ்வோர் பக்கங்களை புரட்டும் போதும் இதழ் கவ்விய முத்தங்களைப்போல் அதன் சுவை இனிப்பா,துவர்ப்பா,கசப்பா எனத்தூண்டிட வேண்டும். வேள்பாரியின் ஒவ்வோர் பக்கங்களை புரட்டும் போது சில தகவல்கள் ஆச்சரியமூட்டவைத்தன.அவை புனைவாகவே இருக்கட்டும். வேள்பாரி முழுதும் நாவல் மரம் பற்றிய செய்திகள் விரவிக்கிடக்கின்றது.நாவலாசிரியர் குறைந்தது 7,8 வகை நாவற் பழங்கள் பற்றி குறிப்பிடுகிறார்.ஒவ்வோர் நாவலும் தனித்தனி சுவை என சொல்கிறார் பூ நாவல் கொடி நாவல் சிறகு நாவல் நரி நாவல் வெண் நாவல் நீர்நாவல் சிறு நாவல் இவை ஏனோ நாவல் பற்றிய என் தேடலை தொடக்கிவிட்டது.வேறுபட்ட சுவை கொண்ட சுவை கொண்ட நாவல்களை சுவைத்திருக்கிறேன். ஆயினும் அவற்றை இவ்வாறு பெயரிட்டு அழைப்பதை நான் கேட்டதில்லை.வெண் நாவலை தனித்து அடையாளப்படுத்துவதை கண்டிருக்கிறேன். சர...