என்னினிய சித்தார்த்தா
உனை மேசையில் படுக்கையில் எங்கும் நிலைப்படுத்தியிருக்கிறேன் தம்மபதத்தையும் பீடகத்தையும் புரட்டிய நான் சரணடைந்துவிட்டேன் பின்தெளிந்தேன் மார்க்கங்கள் மலிவு விலை வாக்குகளென்று நீயேது செய்வாய் தேசம் துறந்த நீ தேசம் ஆள்வோரின் சிநேகிதம் ஆனதெப்படி நீ பரிநிர்வாணம் அடைய சமிஞ்சைகள் ஏதும் தம்பபன்னியில் இல்லை புறகெதற்கு நீ யிங்கு எதற்கு